படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

துபாயில் நடந்த கார் ரேஸில் நடிகர் அஜித்தின் ‛அஜித்குமார் ரேஸிங்' அணி பங்கேற்றது. இதில் போர்ஷ்சே 991 கப் கார் (எண் 901) ரேஸில் இவரது அணி 3வது இடம் பிடித்து அசத்தியது. ஒட்டுமொத்த தொடரில் 23வது இடம் பிடித்திருந்தது. மேலும் ஜிடி4 பிரிவில் ‛ஸ்பிரிட் ஆப் தி ரேஸ்' (Spirit of the race) எனும் விருதும் வழங்கப்பட்டுள்ளது. ரேஸில் 3வது இடம் பெற்றதும் இந்திய தேசியக் கொடியுடன் ரசிகர்களை சந்தித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் அஜித். அத்துடன், வெற்றிப்பெற்ற அணிகளை கவுரப்படுத்தும்போதும் நமது தேசியக்கொடியுடன் மேடையேறினார்.
ரேஸில் அஜித் அணி 3வது இடம் பிடித்திருந்ததை அடுத்து, அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சமூக வலைதளத்தில் டிரெண்ட் செய்து வருகின்றனர். இதனிடையே அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் அஜித்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
துணை முதல்வர் உதயநிதி : "24H துபாய் 2025ல் அஜித் மற்றும் அவரது குழுவினர் 991 பிரிவில் மூன்றாம் இடத்தைப் பிடித்தது மகிழ்ச்சி. அவருக்கும், அவரது அணிக்கும் வாழ்த்துகள். கார் ரேஸில் தமிழக விளையாட்டுத் துறை லோகோவை காட்சிப்படுத்தியதற்காக அஜித் குமார் ரேசிங் அணிக்கு நன்றி. நாட்டிற்கும், தமிழகத்திற்கும் இன்னும் பெருமை சேர்க்க அஜித் வெற்றி பெற வாழ்த்துகிறேன்'' என எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்கட்சி தலைவர் இபிஎஸ் : அதிமுக., பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட பதிவில், ‛‛துபாயில் நடைபெற்ற 24H Series கார் பந்தயத்தில் 3-வது இடத்தைப் பிடித்துள்ள முன்னணி நடிகர், அன்புச் சகோதரர் அஜித் குமார் தலைமையிலான #AjithkumarRacing அணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். மேலும் பல வெற்றிகளைக் குவித்து, நம் மாநிலத்திற்கும் நாட்டிற்கும் மென்மேலும் பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை : பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட வாழ்த்து பதிவில், ‛‛துபாய் 24எச் தொடரில் 991 பிரிவு கார் ரேஸில் நடிகர் அஜித்குமார் அணி 3ம் இடம் பிடித்துள்ளது இந்தியாவுக்கு பெருமையான தருணமாக உள்ளது. அஜித் தான் பங்கேற்கும் துறைகளில் தனித்துவத்துடன் சிறந்து விளங்குகிறார். அஜித் தனது ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பு உணர்வால் பலரையும் ஊக்குவித்து வருகிறார்'' என குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் ரஜினி : ‛‛வாழ்த்துக்கள் மை டியர் அஜித் குமார். சாதித்துவிட்டீர்கள், கடவுள் ஆசிர்வதிக்கட்டும். லவ் யூ'' என தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல் : ‛‛அஜித் குமார் ரேஸிங் அணி தன் முதல் பந்தயத்திலேயே அபார சாதனை படைத்திருக்கிறது. என் நண்பர் அஜித்தை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியன் மோட்டார் ஸ்போர்ட்ஸுக்கு பெருமையான தருணம்'' என குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் மாதவன் : அஜித்தின் கார் ரேஸை நேரில் பார்வையிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் மாதவன், அஜித்துடன் இருக்கும் போட்டோவை பதிவிட்டு, "மிகவும் பெருமையாக உள்ளது. என்னவொரு மனிதர் அஜித் குமார்" என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் : ஏ.கே சார், உங்களின் விடாமுயற்சிக்கு வாழ்த்துகள். பெருமையான தருணம்'' என குறிப்பிட்டுள்ளார்.
இயக்குநர் சிவா : ‛‛அன்புள்ள அஜித் சார், உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் வாழ்த்துகள். தொடர்ந்து வெற்றி பெறுங்கள், எப்போதும் எங்களை ஊக்கப்படுத்துங்கள். உங்கள் மன உறுதி மற்றும் விடாமுயற்சிக்கு அன்பையும், மரியாதையையும் தெரிவிக்கிறே'' என்று தெரிவித்துள்ளார்.
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் : ‛‛நீங்கள் இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளீர்கள். நாங்கள் உங்களை நேசிக்கிறோம், உங்களை நினைத்துப் பெருமைப்படுகிறோம்'' என குறிப்பிட்டுள்ளார்.
இவர்களை போன்று மேலும் பல திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அஜித்திற்கு வாழ்த்து மழை பொழிந்துள்ளனர்.