ஏப்., 18ல் ரெட்ரோ பட இசை வெளியீட்டு விழா | மலையாளத்தில் அறிமுகமாகும் பிரீத்தி முகுந்தன் | ‛மதராஸி' படம் செப்.5ம் தேதி திரைக்கு வருகிறது | ஒத்த ரூவாய்க்கு ரூ.5 கோடி கேட்ட இளையராஜா : குட் பேட் அக்லி தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் | 4கே தொழில்நுட்பத்தில் மீண்டும் வெளியாகும் 'கேப்டன் பிரபாகரன்' | தூசி தட்டப்படும் 'இடி முழக்கம்' | எந்த படப்பிடிப்புக்கும் செல்ல மாட்டோம் : அவுட்டோர் யூனிட் யூனியன் அறிவிப்பு | 'கேங்கர்ஸ்' படத்துக்கு வரும் புது சிக்கல் | பிளாஷ்பேக் : ஒரே வருடத்தில் 18 படங்களில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக் : மூன்று வேடங்களில் நடித்த ஹோன்னப்ப பாகவதர் |
தமிழ் சினிமாவில் எத்தனையோ நகைச்சுவை படங்கள் வெளியாகி இருந்தாலும் சிஎஸ் அமுதன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா, சதீஸ் ஆகியோர் நடிப்பில் 2010ல் வெளியான 'தமிழ்படம்' திரைப்படத்திற்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. அந்த அளவிற்கு இந்த திரைப்படம் ரசிகர்களை வயிறு குலுங்க குலுங்க சிரிக்க வைத்தது. தமிழ் சினிமாவில் வந்த படங்களின் காட்சிகளை நகைச்சுவையுடன் கிண்டலடித்து கதையாக ரசிக்க வைத்ததால் வரவேற்பை பெற்றது.
இதன் 2வது பாகம் அதேபாணியில் எடுக்கப்பட்டு 2018ல் வெளியானது. இது சுமாரன வரவேற்பையே பெற்றது. ஆனாலும், மற்ற படங்களை கிண்டலடிக்கும் வகையிலான காட்சிகளை இப்படங்களில் புகுத்தியிருப்பது பலரை ரசிக்க வைத்தது. இதன் 3வது பாகம் எப்போது வெளியாகும் என இயக்குனர் சிஎஸ் அமுதனிடம் ரசிகர்கள் கேட்டு வந்த நிலையில், 2023ல் விஜய் ஆண்டனியை வைத்து 'ரத்தம்' எனும் படத்தை இயக்கியிருந்தார்.
இந்த நிலையில், 'தமிழ்படம் 3' படம் உருவாக இருப்பதை நடிகர் சிவா உறுதிப்படுத்தியுள்ளார். சமீபத்தில் அவர் கூறுகையில், ''தமிழ்படம் 3 படம் குறித்து 'ஒய் நாட்' தயாரிப்பு நிறுவனத்தின் ஸ்ரீகாந்த்தை சந்தித்து பேசியுள்ளோம். கிட்டத்தட்ட 2 மணிநேரத்திற்கு மேலாக பேசி, 2025ல் தமிழ்படம் 3 எடுக்க முடிவுசெய்துள்ளோம். ஒரு கதை எழுதி படம் பண்ணுவது நார்மல். ஆனால், 100 படங்களை பார்த்து கதை எழுதுவது சவாலான விஷயம்'' எனக் கூறியுள்ளார் சிவா.