பிரச்னைகளால் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன்: சமந்தா | குட் பேட் அக்லி : நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன் | விஜய் சேதுபதியிடம் கதை சொன்ன சிவா | பறவையை பச்சை குத்திய பாலிவுட் நடிகை கிர்த்தி சனோன் | கழுத்துல கருங்காலி மாலை ஏன் : தனுஷ் சொன்ன கலகல தாத்தா கதை | 250 கோடி வசூலைக் கடந்த 'லோகா' | 3 நாளில் 80 கோடி கடந்த 'மிராய்' | 'இட்லி கடை' கதை இதுதான் என சுற்றும் ஒரு கதை | 'இளையராஜா' பயோபிக் : திரைக்கதை எழுத ரஜினிகாந்த் ஆர்வம் |
மார்வெல் நிறுவனம் தனது காமிக்ஸ் சூப்பர் ஹீரோக்களை தொடர்ந்து திரைக்கு கொண்டு வருகிறது. அந்த வகையில் க்ரேவனையும் கொண்டு வந்துள்ளது. 'க்ரேவன் தி ஹண்டர்' என்ற பெயரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிநாட்டில் வெளியாகி உள்ள இந்த படம் ஜனவரி 1ம் தேதி இந்தியாவில் ஆங்கிலம் மற்றும் இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளிலும் வெளியாகிறது.
படத்தை ஜே.சி. சாண்டரால் இயக்கி உள்ளார். ஆரோன் டெய்லர்-ஜான்சன் கிராவனாக நடித்துள்ளார். மற்றும் அரியானா டிபோஸ், ப்ரெட் ஹெச்சிங்கர், அலெஸாண்ட்ரோ நிவோலா, கிறிஸ்டோபர் அபோட் மற்றும் ரஸ்ஸல் க்ரோவ் நடித்துள்ளனர்.
மார்வெல் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து கொலம்பியா பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இது சோனியின் ஸ்பைடர் மேன் யுனிவர்ஸில் 6வது படம். கிராவனின் தந்தையுடனான உறவையும், மிகப்பெரிய வேட்டைக்காரனாக மாறுவதற்கான அவனது பாதையும் படத்தின் கதை.
‛க்ரேவன் தி ஹண்டர்' மார்வெலின் மிகச் சிறந்த வில்லன்களில் ஒருவர். அவர் எப்படி உருவானார் என்ற கதையை தனியாக முழுக்க ஆக்ஷனுடன் இது உருவாகியுள்ளது. ஆரோன் டெய்லர்-ஜான்சன் தனது இரக்கமற்ற கேங்க்ஸ்டர் தந்தையான நிகோலாய் க்ராவினோஃப் (ரஸ்ஸல் குரோவ்) உடனான சிக்கலான உறவைக் கொண்ட கிராவெனாக நடித்துள்ளார்.