தோட்டா தரணிக்கு செவாலியே விருது | மீண்டும் ரஜினியை இயக்குவது போன்று கமலையும் இயக்குவீர்களா? சுந்தர்.சி கொடுத்த பதில் | நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் | ‛இன்று போய் நாளை வா' : கே.பாக்யராஜ் சொன்ன பிளாஷ்பேக் | ராஜமவுலி படத்தில் ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் வெளியீடு | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ராதிகா ஆப்தே படம் | அனந்தா படத்தில் நடந்த அதிசயங்கள் : சத்யசாய்பாபா மகிமை சொன்ன சுரேஷ் கிருஷ்ணா | டப்பிங் பணிகளை துவங்கிய அபிஷன், அனஸ்வரா | தமிழகத்தில் வெளியாகும் ஆஸ்கர் பரிந்துரை படம் | அன்னை இல்லத்தில் இருந்து அடுத்து வாரிசு: ரஜினி ஆசி |

1940 மற்றும் 50களில் தமிழ், ஹிந்தி படங்களைத் தயாரித்து, இயக்கி, நடித்து வந்தவர் மும்பையைச் சேர்ந்த பாக்வன். இவரை 'பாக்வன் தாதா' என்றும் சொல்வார்கள். 1940ம் ஆண்டு அவர் இயக்கிய தமிழ் படம்தான் 'ஜயக்கொடி'. இந்த படத்தில் கே.டி.ருக்மணி, கே.நடராஜன் நடித்திருந்தார்கள். பி.வி.சாமி, எஸ்.ஆர்.சாரங்கன் வசனங்களை எழுதினர். அஹமத்துல்லா ஒளிப்பதிவு செய்த இந்தப் படத்துக்கு சி.ராமச்சந்திரா இசை அமைத்தார். பாடல்களை சி.முருகேசன் எழுதினார்.
படத்தின் கதை இதுதான்: வரதட்சணை கொடுக்க முடியாததால் ஏழைப்பெண் ராஜத்துக்கு (ருக்மணி), திருமணமாகவில்லை. இதற்கிடையே பண ஆசை கொண்ட கந்துவட்டிக்காரன், ராஜமின் தந்தையைக் கொன்று வீட்டுக்கு தீ வைக்கிறான். இதனால் ஆவேசம் கொள்ளும் ராஜம், வரதட்சணைக்கு எதிராகக் களமிறங்குகிறாள். வரதட்சணை கேட்கும் மணமகன்கள் மர்மமான முறையில் காணாமல் போகிறார்கள்.
வரதட்சணையால் பாதிக்கப்பட்ட ராஜம் தனது பெயரை (ஜெ)ஜயக்கொடி என்று மாற்றிக் கொண்டு பெண் தீவிரவாதியாகி வரதட்சணை கேட்கிறவர்களுக்கு தானே தண்டனை தருவதுதான் படத்தின் கதை. பிற்காலத்தில் வந்த 'நான் சிவப்பு மனிதன்', 'சட்டம் ஒரு இருட்டரை' போன்ற படங்களுக்கு இதுதான் முன்னோடி. படத்தின் கதையை பார்த்து மக்கள் மிரண்டு போனார்கள். ருக்மணி அதிரடி ஆக்ஷன் ஹீரோயின் ஆனார். நாயகனாக நடித்த கே.நடராஜன் பின்னர் ஜயக்கொடி நடராஜன் ஆனார்.




