கூலி: அமெரிக்காவில் 7 மில்லியன் வசூல் | ரஜினி, கமல் இணையும் படத்தில் சூர்யா நடிக்கிறாரா? | விபத்தில் சிக்கியதாக பரவிய வதந்தி: விளக்கமளித்து முற்றுப்புள்ளி வைத்த காஜல் அகர்வால் | அனுமதியின்றி தன் பெயர், படத்தை பயன்படுத்தக்கூடாது: ஐஸ்வர்யா ராய் வழக்கு | சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்க போகும் 3 படங்கள் விபரம் | பிரபாஸ் பிறந்தநாளில் ‛தி ராஜா சாப்' படத்தின் முதல் பாடல் | செப்., 13ல் இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பிரமாண்ட பாராட்டு விழா | அல்லு அர்ஜூனை பார்த்து வியந்த ‛டிராகன்' பட இயக்குனர் | தன் முதல் தமிழ் படக்குழுவினருடன் பிறந்தநாளை கொண்டாடிய அனஸ்வரா ராஜன் | கல்கி 2ம் பாகத்தில் எனக்கு வாய்ப்பு கிடைக்குமா ? கல்யாணி பிரியதர்ஷன் ஆர்வம் |
சூர்யா நடிப்பில் சிவா இயக்கி உள்ள கங்குவா படத்தின் இசை விழா நேற்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. நவம்பர் 14ம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தில் சூர்யாவுடன் திஷா பதானி, பாபி தியோல், நட்டி நடராஜ், கே.எஸ். ரவிக்குமார், கோவை சரளா உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி விட்டதால் புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமடைந்திருக்கிறது. அதோடு இந்த படத்திற்காக பல வெளியூர்களுக்கு சென்று புரோமோஷனில் ஈடுபட்டு வருகிறார் சூர்யா. மேலும், சூர்யா, கார்த்தி நடிக்கும் படங்களின் பூஜை, இசை வெளியீட்டு விழாக்களில் அவர்களின் தந்தையான நடிகர் சிவக்குமார் தொடர்ந்து கலந்து கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் நேற்று கங்குவா இசை விழாவிலும் கலந்து கொண்ட சிவகுமார், சூர்யா பற்றிய ஒரு கடந்த கால தகவலை மேடையிலே சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார். அவர் பேசும்போது, ‛‛சூர்யாவை பி.காம் படிப்பதற்காக சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் சீட் கேட்டு சென்ற போது இடம் தர மாட்டேன் என்று சொல்லிவிட்டார்கள். அதன் பிறகு நான் பிரின்சிபாலை சந்தித்து என்ன பிரச்னை, எதற்காக என் மகனுக்கு சீட்டு தர மாட்டேன் என்று சொல்கிறீர்கள்? என கேட்டேன். அப்போது சிவாஜி கணேசனின் மகன் பி.காம் முடிக்காமல் பாதியிலேயே சென்று விட்டார். இன்னும் சில பிரபலங்களின் மகன்களும் இப்படித்தான் பாதியிலேயே சென்று விட்டார்கள் என்று சொன்னார்.
அதற்கு நான் என் பையன் அப்படி எல்லாம் செல்ல மாட்டார். கண்டிப்பாக பி.காம் முழுமையாக படித்து முடிப்பான் என்று சொல்லி சீட் வாங்கினேன். ஆனால் பி.காம் கடைசி ஆண்டில் சூர்யா நான்கு அரியர் வைத்திருந்தார். அப்போது அவரிடத்தில் என் மானத்தை வாங்கிடாதே, எப்படியாவது படித்து அரியர்சை எழுதி விடு என்று சொன்னேன். அதன்படி சூர்யாவும் கஷ்டப்பட்டு படித்து அரியர்சை எழுதி பி.காம் டிகிரி வாங்கி விட்டான்'' என்று கூறினார்.
இப்படி தான் அரியர்ஸ் வைத்திருந்த விவகாரத்தை பொதுமேடையில் தனது தந்தை சொல்லிவிட்டதால் விழாவுக்கு வந்திருந்தோர் அனைவரும் தன்னை நோக்கி பார்த்ததை அடுத்து கைகளால் தனது முகத்தை மறைத்துக் கொண்டார் சூர்யா.