பிளாஷ்பேக்: 'முக்தா' சீனிவாசன் என்ற முத்தான இயக்குநரைத் தந்த “முதலாளி” | ஹீரோயின் ஆனார் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா | சர்வதேச திரைப்பட விழாவில் அனுபமா படம் | 4 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ராய் லட்சுமி | நடிகை பலாத்கார வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு: தண்டனையிலிருந்து தப்புவாரா திலீப் | பிளாஷ்பேக் : விஜயகாந்துக்காக மாற்றப்பட்ட கதை | தெலுங்கு பேச பயிற்சி எடுக்கும் பிரியங்கா சோப்ரா | கணவர் மீது புகார் அளித்துள்ள செலினா ஜெட்லி | பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோயின் | அவரா? இவரா? வேறு யாருமா? குழப்பத்தில் ரஜினி படம் |

நடிகர் அஜித்குமார், நடிப்பை தாண்டி துப்பாக்கி சுடுதல், புகைப்படம் எடுத்தல், சிறிய ரக விமானங்களை வடிவமைப்பது, கார் மற்றும் பைக் ரேஸிங் என பல்துறைகளில் அதிக ஆர்வம் கொண்டவர். பல போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். சமீபத்தில் 'விடாமுயற்சி' படப்பிடிப்புக்கு இடையே பைக்கில் உலகின் பல்வேறு பகுதிகளில் சுற்றி வந்தவர், 'குட் பேட் அக்லி' படப்பிடிப்புக்கு இடையே கார் ரேஸிங்கில் பங்கேற்க ஆயத்தமாகி வந்தார்.
இந்நிலையில் 'அஜித்குமார் ரேஸிங்' என்கிற புதிய கார் பந்தய அணியை துவங்கியுள்ளதாக அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா அறிவித்திருந்தார். மேலும், ஐரோப்பியாவில் நடைபெறும் 24எச் கார் ரேஸிங்கில் 'போர்ஷே 992 ஜிடி3 கப்' பிரிவில் அஜித் குமார் ரேஸிங் அணி பங்கேற்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
இன்று (அக்.,22) அஜித்குமார் ரேஸிங் அணியின் லோகோவை வெளியிட்டுள்ளனர். அத்துடன் அணியின் உரிமையாளர் மற்றும் முதன்மை ஓட்டுநராக அஜித் செயல்படுவார் என்றும், அவருடன் மேலும் 3 கார் ரேஸர்கள் அணியில் இடம்பெற்றுள்ள தகவலையும் பகிர்ந்துள்ளனர். அஜித் மீண்டும் கார் ரேஸிங்கில் பங்கேற்க உள்ளதால் அவரது ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.