கமல் பிறந்தநாளில் தக் லைப் பட சிறப்பு வீடியோ | ஷாலினியை தொடர்ந்து மாதவனை சந்தித்த அஜித் | விஜய் பட நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கும் சூர்யா | அமரன் படத்தில் நடித்தது ஏன்? - வெற்றி விழாவில் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | ‛தெறி' ஹிந்தி ரீ-மேக்கான ‛பேபி ஜான்' பட டீசர் வெளியானது | அமீர்கான் தயாரிப்பில் ‛அமரன்' பட இயக்குனர் | என்ஜிகே படத்தில் இருந்து சாய் பல்லவி வெளியேறாமல் தடுத்த தனுஷ் | விஜய் தேவரகொண்டா படத்தில் இணையும் ‛தி மம்மி' பட நடிகர் | குழந்தையை தாலாட்டு பாடி தூங்கவைக்கும் '96' இசையமைப்பாளர் | சாதனை விலையில் 'விஜய் 69' வெளிநாட்டு உரிமை |
1930களில் மிகப்பெரிய கர்நாடக இசை மேதையாக திகழ்ந்தவர் எஸ்.ராஜம். பாபநாசம் சிவன், அரியக்குடி ராமானுஜ அய்யங்கார், மதுரை அணி அய்யர் போன்றோர் இவர் காலத்திய இசை கலைஞர்கள். பின்னாளில் திகில் பட இயக்குனராக இருந்த வீணை எஸ்.பாலச்சந்தரின் சகோதரர்தான் ராஜம். இருவரும் இணைந்து பல இசை கச்சேரிகளை நடத்தி உள்ளார்கள். இவர்களது சகோதரி ஜெயலட்சுமியும் நடிகை மற்றும் பாடகி.
இசை கலைஞர்கள் நடிகர்களாவும் விளங்கிய காலத்தில் பல நடிப்பு வாய்ப்புகளை மறுத்து வந்தார் ராஜம். என்றாலும் பலரின் வற்புறுத்தலின் பேரில் 1934ம் ஆண்டு 'சீதா கல்யாணம்' படத்தில் ராமனாக அறிமுகமானார், அடுத்த ஆண்டு, 'ராதா கல்யாணம்' படத்தில் கிருஷ்ணராக நடித்தார், 1936ல், மராத்தி திரைப்பட தயாரிப்பாளர் பால்ஜி பந்தர்கர் இயக்கிய 'ருக்மணி கல்யாணத்தில்' மீண்டும் கிருஷ்ணராக நடித்தார். கடைசியாக தியாகராஜ பாகவதர் நடித்த 'சிவகவி' படத்தில் நடித்தார். அதன் பிறகு அவர் நடிக்கவில்லை.
ராஜம் இசைத் துறையில் ஜாம்பவனாக இருந்தார். 72 மேள கர்த்தா ராகங்களில் நிபுணராக இருந்தார், மேலும் முத்துசுவாமி தீட்சிதரின் அனைத்து பாடல்களையும் பாடியவர் ராஜம் மட்டுமே. இவரது மாணவர்களில் எம்.எஸ்.சுப்பலட்சுமி, எம்.எல்.வசந்தகுமாரி ஆகியோர் அடங்குவர். கர்நாடக இசையில் கருப்பொருள் நிகழ்ச்சிகள் மற்றும் கிமிஸி இல் இசை பாடங்களை அறிமுகப்படுத்தினார்.
ராஜம் பெரிய புகைப்பட கலைஞர். தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான கோவில்கள் அனைத்தையும் முதன் முதலாக புகைப்படம் எடுத்தது அவர்தான். அதோடு கோவில்களை அவர் ஓவியமாகவும் தீட்டினார். அந்த ஓவியங்களின் மூலத்தை கொண்டுதான் இப்போதும் கோவில் ஓவியங்கள் வரையப்பட்டு வருகிறது. தனது 90வது வயதில் காலமானார்.