வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்த சமந்தா கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர்.
இந்த நிலையில் தெலுங்கானா அமைச்சர் கொண்டா சுரேகா என்பவர் இவர்களது விவாகரத்து பின்னணியில் பாரதிய ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் தலைவரான கே.டி ராமாராவின் தலையீடு இருந்தது என்றும், இப்படி தெலுங்கு திரையுலகில் இவரது ஆதிக்கத்தால் பல நடிகைகள் சினிமாவை விட்டே ஓடி விட்டனர் என்றும் விமர்சித்து இருந்தார்.
தனக்கு பிடிக்காத எதிர்க்கட்சியை சேர்ந்தவரை விமர்சிப்பதற்காக தங்களது குடும்ப வாழ்க்கை பற்றி தவறான ஒரு கருத்தை கூறியதற்காக நாகார்ஜுனா, நாகசைதன்யா மற்றும் சமந்தா மூவருமே அமைச்சருக்கு எதிராக தங்களது பதிலடியை கொடுத்தனர். அது மட்டுமல்ல தெலுங்கு திரையுலகை சேர்ந்த ராம்சரண், ஜூனியர் என்டிஆர், பிரபாஸ், ராஜமவுலி, நானி உள்ளிட்ட பலரும் பெண் அமைச்சரின் கருத்துக்கு தங்களது கண்டனங்களை தொடர்ந்து பதிவு செய்தனர். தனக்கு எதிர்ப்பு வலுப்பதை கண்ட அமைச்சரும் இது குறித்து தான் மன்னிப்பு கேட்பதாக கூறியுள்ளார்.
இந்த விமர்சனங்களையும், சர்ச்சைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு நவராத்திரி கொண்டாட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார் நடிகை சமந்தா. கோவையில் உள்ள சத்குருவின் ஈஷா யோகா மையத்தில் அமைந்துள்ள லிங்க பைரவி தேவியின் சிலை முன்பாக அமர்ந்து நவராத்திரி பூஜா வழிபாடுகளை துவங்கியுள்ளார் சமந்தா.
இது குறித்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளதுடன், “உங்களுடைய வார்த்தையை நான் அதற்காக எடுத்துக் கொள்கிறேன். நன்றி தேவி. அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.