மோகன்லாலின் 5 படங்களுக்கு மொத்தமாக ரிலீஸ் தேதி அறிவிப்பு | பாக்கியலெட்சுமி சீரியல் முடிவுக்கு வருகிறதா? | ‛அருண் தான் என் உலகம்' - மாற்றி மாற்றி பேசும் அர்ச்சனா | சீனாவில் விஜய் சேதுபதியின் 'மகராஜா' ரிலீஸ் : சிவகார்த்திகேயன் வாழ்த்து | கோவாவில் திருமணம் : திருப்பதியில் கீர்த்தி சுரேஷ் பேட்டி | பொங்கலுக்கு 'விடாமுயற்சி' : வேறு படங்கள் வெளிவருமா? | விஜய் - 69 : திடீரென வாங்கப்பட்ட 'பகவந்த் கேசரி' உரிமை ? | ‛எல்லாமும் கைவிடும் போது உன்னை நம்பு' - திடீரென இரவில் வெளியான விடாமுயற்சி டீசர் | வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் |
மலையாள நடிகையான நிகிலா விமல் கடந்த சில வருடங்களுக்கு முன்பே தமிழில் சசிகுமாரின் வெற்றிவேல், கிடாரி மற்றும் கார்த்தியின் தம்பி உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஆனாலும் சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை திரைப்படம் நிகிலா விமலுக்கு மிகப்பெரிய பெயரை பெற்று தந்துள்ளது. இன்னொரு பக்கம் மலையாளத்தில் 'குருவாயூர் அம்பல நடையில், நுனக்குழி' மற்றும் சமீபத்தில் வெளியான கத இன்னுவர உள்ளிட்ட படங்களிலும் நிகிலா விமலின் நடிப்பு பாராட்டுக்களை பெற்று வருகிறது. ஆனால் கடந்த 2022ல் உன்னி முகுந்தன் தயாரித்து கதாநாயகனாக நடித்த மேப்படியான் என்கிற திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க அழைப்பு வந்த போது மறுத்துவிட்டார் நிகிலா விமல். சமீபத்திய பேட்டி ஒன்றில் அதற்கான காரணத்தை அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “மேப்படியான் படத்தின் இயக்குனர் விஷ்ணு மோகன் என்னை சந்தித்து அந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரம் குறித்து கூறியபோது அதில் செய்வதற்கு ஒன்றுமே இல்லை என்று தான் தோன்றியது. ஆனாலும் எனக்கு முழு கதையை கூறுங்கள் என்று கேட்டபோது அவரிடம் அப்போது முழுக்கதை தயாராக இல்லை. கேட்ட அளவிற்கு அந்த கதாபாத்திரம் என்னை ஈர்க்கவில்லை என்பதால் நான் அதில் நடிக்க மறுத்து விட்டேன். அப்போது இயக்குனர் விஷ்ணு மோகனின் முகத்தில் நான் மிகப்பெரிய ஏமாற்றத்தை பார்த்தேன். அதேசமயம் அடுத்ததாக அவர் 'கத இன்னுவர' என்கிற படத்தின் ஸ்கிரிப்ட்டுடன் மீண்டும் என்னிடம் வந்தார். அந்த படத்தின் கதையும் எனது கதாபாத்திரமும் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. அதனால் உடனே ஒப்புக்கொண்டு நடித்தேன்” என்று கூறியுள்ளார்.