கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா | கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி பண்றோம் : ஆர்.ஜே. பாலாஜி | பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள் | திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் ஆன பாவனா | சென்னை குற்ற சம்பவ பின்னணியில் உருவான 'சென்னை பைல்ஸ்' |
சின்னத்திரை தொகுப்பாளினிகளில் மிகவும் அதிக ரசிகர்களை பெற்று புகழ் பெற்றவர்களில் வீஜே அஞ்சனாவும் ஒருவர். அண்மையில் கிளாமர் போட்டோஷூட்டுகளிலும் இறங்கி கலக்கி வந்தார். சில தினங்களுக்கு முன் வீட்டிலேயே கீழே விழுந்ததில் வலது கையில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதற்காக அண்மையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அஞ்சனா, இன்ஸ்டாகிராமில் கண்ணீருடன் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அதில், 'சர்ஜரிக்கு பின் மனதளவில் தளர்ந்துவிட்டேன். கை குணமாக குறைந்தது ஆறு வாரங்கள் ஆகும். காயம் குணமாக குறைந்தது ஒருவருடம் ஆகிவிடும். முழுவதுமாக உடைந்துவிட்டேன். இருந்தாலும் இட்ஸ் ஓகே. இது முடிவல்ல என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டிருக்கிறேன் ' என்று பதிவிட்டிருந்தார்.
இதைபார்க்கும் ரசிகர்கள் அவர் சீக்கிரமே குணமாக வேண்டுமென பிரார்த்தனை செய்து வருகின்றனர்.