ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
ஓடிடிக்கள் வந்த பிறகு ஐந்து மொழிகளில் ஒரு படத்தை வெளியிடுவது வழக்கமாகிவிட்டது. முன்னணி நடிகர்களின் படங்களை பான் இந்தியா படம் என தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என அந்தத் திரையுலகத்தினர் வெளியிட்டு வருகிறார்கள். அந்த வரிசையில் விஜய் நடித்துள்ள 'தி கோட்' படமும் அடுத்த மாதம் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது.
இப்படத்தின் மூன்றாவது சிங்கிளான 'ஸ்பார்க்' பாடல் கடந்த வாரம் வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்ற பாடலாக அமைந்தது. யுவனின் இசையைப் பற்றி பலரும் கண்டபடி விமர்சிக்க ஆரம்பித்தனர். விஜய் ரசிகர்களும் அந்தப் பாடல் பிடிக்கவில்லை என சொன்னது ஆச்சரியத்தை அளித்தது.
இருப்பினும் தமிழில் அந்தப் பாடல் தற்போது 11 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. தமிழில் பெற்ற பார்வைகளில் பாதியளவு பார்வைகளை ஹிந்தியிலும் பெற்று ஆச்சரியப்படுத்தியுள்ளது. ஹிந்தியில் 4.5 மில்லியன் பார்வைகளையும், தெலுங்கில் 2 மில்லியன் பார்வைகளையும் கடந்துள்ளது.
ஹிந்தியில் இந்தப் பாடலை குனால் கஞ்சவாலா, யுவன் ஷங்கர் ராஜா, விருஷா பாலு பாடியுள்ளனர். ஹிந்திப் பாடலின் வரிகள், குனால் குரல் ஆகியவை தமிழை விடவும் ஈர்ப்பாக உள்ளதாக கமெண்ட் செய்துள்ளனர்.