சக்தித் திருமகன், கிஸ் படங்களின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | அமெரிக்க பிரீமியரில் பவன் கல்யாணின் ஓஜி படம் செய்த சாதனை! | எண்ணம் போல் வாழ்க்கை என்பது என் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கிறது! -இட்லி கடை டிரைலர் விழாவில் தனுஷ் பேச்சு | ஷேன் நிகாமிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன்: சாந்தனு | பவன் கல்யாண் படத்திற்கு சலுகைகளை அள்ளி வழங்கிய ஆந்திர அரசு | பிளாஷ்பேக்: 40 வருடங்களுக்கு முன்பே பிகினியில் கலக்கிய ஜெயஸ்ரீ | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் ஆதிக்கம் செலுத்திய சி.ஆர்.ராஜகுமாரி | அவர்களை பிதுக்கணும். மசாலா தடவணும்... சமூகவலைதள பார்ட்டிகள் மீது கோபமான வடிவேலு | கவர்ச்சி உடைகளுக்கு வரும் விமர்சனம் குறித்து கவலை இல்லை! - நடிகை வேதிகா | மலையாளத்தில் அறிமுகமாவதை உறுதிபடுத்திய டிஎஸ்கே! |
டிரெண்டிங், வியூஸ் இவை இரண்டு தான் முன்னணி நடிகர்களின் ரசிகர்களுக்குத் தேவையானவை. அவர்களது அபிமான நடிகர்களின் பாடல்கள், டீசர், டிரைலர் ஆகியவை வெளிவந்தால் அவை மற்ற நடிகர்களின் சாதனைகைளை முறியடித்தே ஆக வேண்டும் என நினைப்பார்கள்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் நடிக்கும் ஒரு படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கப் போகிறார் என்ற அறிவிப்பு வந்ததும் யுவன் ரசிகர்கள் மகிழ்ந்தார்கள். 21 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் 'தி கோட்' படத்தில் அக்கூட்டணி இணைந்தது. அஜித்தின் பல படங்களுக்கு இசையமைத்தவர் யுவன். ஆனால், இதுவரையிலும் ரஜினி, கமல் படங்களுக்கு இசையமைக்கவில்லை.
யுவனுக்குப் பிறகு பல வருடங்கள் கழித்து இசையமைப்பாளராக வந்த அனிருத் கூட ரஜினி, கமல் படங்களுக்கு இசையமைத்துவிட்டார். இருந்தாலும் யுவன் அது பற்றி எங்குமே தனது வருத்தத்தைப் பதிவு செய்ததில்லை. இப்போதைய 2கே கிட்ஸ்கள் அனிருத் ரசிகர்களாக இருக்கிறார்கள். அவர்கள் சமீபத்தில் வெளியான 'தி கோட்' படத்தின் மூன்றாவது சிங்கிளான 'ஸ்பார்க்' பாடலை வரவேற்கவில்லை. மாறாக நிறைய டிரோல் செய்தார்கள். இருந்தாலும் பாடல் ஒரு 'ஸ்லோ பாய்சன்' என யுவன் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
தற்போது யு டியூபில் அந்தப் பாடல் 10 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. அதே சமயம் அனிருத் இசையில் தெலுங்கில் 'தேவரா' படத்தின் 'சுட்டமல்லே' பாடல் வெளியாகி உள்ளது. அது 13 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இவற்றை வைத்து யுவன் ரசிகர்களும், அனிருத் ரசிகர்களும் சமூக வலைத்தளத்தில் சண்டை போட்டு வருகிறார்கள்.
அனிருத் பல 100 மில்லியன் பாடல்களைக் கொடுத்தாலும் யுவன் மட்டுமே 1500 மில்லியன் பாடலைக் கொடுத்திருக்கிறார் என யுவன் ரசிகர்கள் சொல்லி வருகிறார்கள். அப்படி ஒரு பாடலை அனிருத் தருவாரா என்றும் கேட்கிறார்கள்.