கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி | பிளாஷ்பேக்: ஒரே கதையை படமாக்க போட்டிபோட்ட தயாரிப்பாளர்கள் | 'விடாமுயற்சி' செய்யாததை செய்த 'குட் பேட் அக்லி' | இந்த வாரம் ஓடிடி-யில் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி? | ஆற்றில் குப்பையை கொட்டியதற்காக பிரபல பாடகருக்கு 25000 ரூபாய் அபராதம் | கடனை திருப்பி கேட்டதால் என் மீது புகார் : நாத்தனார் மீது பதில் வழக்கு தொடர்ந்த ஹன்சிகா |
சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது குறித்து இந்திய சினிமாக்களில் எச்சரிக்கை வாசகங்கள் வைப்பது கடந்த சில வருடங்களாக உள்ளது. ஹீரோக்கள் புகை பிடிக்கும் காட்சிகள், மது அருந்தும் காட்சிகளில் நடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று சமூக அக்கறை உள்ள பலர் சினிமாத் துறையினடரிடம் வேண்டுகோள் வைத்துள்ளார்கள்.
ஆனால், அவற்றை தமிழ் சினிமா ஹீரோக்களும், இயக்குனர்களும் கேட்பதாக இல்லை. சில படங்களில் புகை பிடிப்பதைத் தவிர்த்திருந்த நடிகர் ரஜினிகாந்த் கூட 'ஜெயிலர்' படத்தில் சுருட்டு பிடிக்கும் காட்சியில் நடித்திருந்தார்.
நடிகர் விஜய் நடித்து வெளிவந்த 'லியோ' படத்தின் முதல் சிங்கிளான 'நான் ரெடிதான் வரவா' வீடியோவில் விஜய் புகை பிடித்த காட்சிகள், மது அருந்துவது பற்றிய பாடல் வரிகள் அப்போது கடும் சர்ச்சையை ஏற்படுத்தின. அதன்பிறகு அவற்றில் எச்சரிக்கை வாசகங்களை மட்டும் சேர்த்தார்கள். ஆனால், பாடல் படத்தில் அப்படியேதான் இருந்தது, அதை நீக்கவில்லை.
நிஜ வாழ்க்கையில் ஊருக்கு உபதேசம் செய்யும் ஹீரோக்கள் அவர்களது சினிமாக்களில் அப்படி எதையும் செய்வதில்லை. இன்று சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யாவின் 44வது படக்குழு ஒரு வீடியோ ஒன்றை நள்ளிரவில் வெளியிட்டுள்ளது. அதில் புகை பிடித்தபடி நடித்துள்ளார் சூர்யா. சினிமாவாக இருந்தாலும் ஒரு பிறந்தநாளன்று வெளியிடக் கூடிய சமூக அக்கறை வீடியோவா இது ? என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்துள்ளது.