தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு | இப்போதைக்கு லோகா.. அடுத்து இன்னொரு படம் வரும் : பிரித்விராஜ் ஆருடம் | திரிஷ்யம் 3 மலையாளத்தில் தான் முதலில் வெளியாகும் : ஜீத்து ஜோசப் திட்டவட்டம் | பாலிவுட் நடிகருக்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி | நடிகர் சிவகுமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம் | 'அவதார் ' பார்க்க 10 லட்சம் இந்தியர்கள் ஆர்வம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் வெள்ளி விழா கொண்டாடிய படம் |

கடந்த 2016ம் ஆண்டு வெளியான மெட்ரோ என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் சிரிஷ். ஆனந்த கிருஷ்ணன் இயக்கிய அப்படத்தில் பாபி சிம்ஹாவும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அதையடுத்து ராஜா ரங்குஸ்கி, ப்ளடி மணி, பிஸ்தா ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் பல ஆண்டுகளாக தான் காதலித்து வந்த ஹஸ்னா என்ற பெண்ணை நேற்று முன்தினம் திருமணம் செய்து கொண்டுள்ளார் சிரிஷ். நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையில் அவரது திருமணம் எளிமையாக நடைபெற்றுள்ளது.
தொடர்ந்து நேற்று நடந்த திருமண வரவேற்பில் திரையுலகினர் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். தனுஷ், சிவகார்த்திகேயன், அருண் பாண்டயன், ஆர்யா, அசோக் செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இது குறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியானதை அடுத்து ரசிகர்கள் அவருக்கு திருமண வாழ்த்து தெரிவித்துள்ளனர்.