கவுண்டம்பாளையம் ரிலீஸ் தள்ளிவைப்பு : படத்தை திரையிட விடாமல் மிரட்டுவதாக ரஞ்சித் புகார் | சார்-ல் இணைந்து பாடிய ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி | டீன்ஸ் கிராபிக்ஸ் : கோவை போலீசில் புகார் அளித்த பார்த்திபன் | விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பத்தில் பயன்படுத்த யாரும் அனுமதி பெறவில்லை : தேமுதிக., | விஜய், மோகன்லாலுடன் இணைந்து நடிக்கும் கோமல் சர்மா | வானத்தில் பறந்த இந்தியன் கொடி | ஜமா படத்திற்காக நிஜ தெருக்கூத்து கலைஞர்களை பாடவைத்து இசையமைத்த இளையராஜா | ஸ்பெயின் டென்னிஸ் வீரரையும் விட்டு வைக்காத ஆவேசம் பட பாடல் | திரிஷா, வினய்யை தொடர்ந்து ஐடென்டி படப்பிடிப்பை முடித்த டொவினோ தாமஸ் | அமெரிக்காவில் கருட மகாராஜாவை சந்தித்த வெங்கட்பிரபு |
குரு சோமசுந்தரம் நாயகனாக நடித்துள்ள 'பாட்டல் ராதா' படத்தை தினகரன் சிவலிங்கம் என்பவர் இயக்கி உள்ளார். இப்படத்தின் போஸ்டர் சில தினங்களுக்கு முன்பு வெளியான நிலையில் தற்போது டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
'நானா குடிகாரன்?' என்ற பாடலுடன் தொடங்கும் இந்த டீசரில் ஒரு குடிகாரனின் வாழ்க்கையில் நடக்கும் அனைத்து விஷயங்களும் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக இன்னொரு தடவை குடித்து விட்டு வந்தால் தாலியை கழட்டி எரிந்துவிட்டு குழந்தைகளுடன் போய்க் கொண்டே இருப்பேன் என்று அவரது மனைவி சொல்வது, போலீஸ் அதிகாரி, எதுக்குடா குடிக்கிறே என்று கேட்கும் போது, ''நான் குடிப்பதினால் எங்கள் குடும்பமே நாசமா போகுது. அதை நெனைச்சி கவலைப்பட்டுதான் குடிக்கிறேன்'' என்று கூறும் குரு சோமசுந்தரம், ''நான் சம்பாதித்து என் காசுல குடிக்கிறேன். யாரும் என்ன குடிக்க கூடாதுன்னு சொல்ல ரைட்ஸ் கிடையாது. ஊர் பூரா டாஸ்மாக்கை திறந்து வச்சிட்டு அப்புறம் குடிக்கிறவனை தப்பு சொன்னா என்ன அர்த்தம்?'' என்று தமிழக அரசை அட்டாக் செய்யும் வசனமும் இந்த டீசரில் இடம் பெற்றுள்ளது. நடிகர்கள் சிம்பு, ஆர்யா ஆகியோர் தங்களது எக்ஸ் பக்கத்தில் இந்த டீசரை வெளியிட்டுள்ளனர்.