நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தை மாநில கட்சியாக பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தை ஏற்றுள்ள தேர்தல் கமிஷன் ஆட்சேபனை தெரிவிக்க கெடு விதித்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை, நடிகர் விஜய் துவங்கியுள்ளார். கட்சியை, தேர்தல் கமிஷனில் பதிவு செய்வதற்கான விண்ணப்பம், கடந்த பிப்ரவரியில் வழங்கப்பட்டது. ஆனால், கட்சியை பதிவு செய்யாமல், தேர்தல் கமிஷன் நிலுவையில் வைத்தது. இதை தொடர்ந்து, பொதுச் செயலராக புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ., ஆனந்த், பொருளாளராக வெங்கட்ரமணன், தலைமை நிலைய செயலராக கடலுார் ராஜசேகர், இணை கொள்கை பரப்பு செயலராக, வேலுார் தாஹீரா ஆகியோரை விஜய் நியமித்தார்.
இந்த விபரங்கள், தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதை ஏற்றுள்ள தேர்தல் கமிஷன், கட்சி தொடர்பாக ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால், வரும் 11ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என, கெடு விதித்துள்ளது. ஆட்சேபனைகள் வராத பட்சத்தில், தமிழக வெற்றிக் கழகத்தை மாநில கட்சியாக பதிவு செய்து, இம்மாத இறுதிக்குள் தேர்தல் கமிஷன் அறிவிக்கும்.