விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் |
நெல்லை மாவட்டம் வாகை குளத்தைச் சேர்ந்த தீபக் ராஜா என்பவர் 6 பேர் கொண்ட கும்பலால் பட்டப்பகலில் ஓட ஒட விரட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை தொடர்பாக இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் தனது எக்ஸ் தளத்தில் கருத்து வெளியிட்டிருந்தது.
அதில் “திருநெல்வேலியில் மீண்டும் ஒரு சாதிய தீண்டாமை படுகொலை, நீலம் பண்பாட்டு மையம் மிக வன்மையாக கண்டிக்கிறது. கடந்த 2021ம் ஆண்டு பாளையங்கோட்டை சிறையில் சாதிவெறி கும்பல்களால் படுகொலை செய்யப்பட்ட முத்து மனோவின் நண்பரும், பட்டியலின தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை சேர்ந்தவருமான சகோதரர் தீபக் ராஜா பாளையங்கோட்டையில் உணவகத்துக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டுள்ளது பெரும் அவலம். சக மனிதனை படுகொலை செய்யும் சாதிவெறி பிடித்த குற்றவாளிகளை உடனடியாக எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்து, பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நீதி வழங்கிட வேண்டும்” என்று அந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் “பா. ரஞ்சித் தென்மாவட்டங்களில் சாதிய மோதலை தூண்டி விடுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி டி.எஸ்.பி.யிடம் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளனர். அந்த புகாரில், “இயக்குனர் பா. ரஞ்சித் தென்மாவட்டங்களில் சாதிய மோதலை தூண்டிவிட முயற்சிக்கிறார். திருநெல்வேலியில் தீபக் ராஜா என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தின் பெயரை கூறி குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. இதனால் பா. ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த எக்ஸ் தளத்தை மூட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.