இசை அமைப்பாளர் பயணம் தொடரும் : சக்திஸ்ரீ கோபாலன் | கரம் மசாலா : விமல், யோகி பாவுவின் காமெடி படம் | பிளாஷ்பேக் : ரஜினி கேட்டும் கிளைமாக்ஸை மாற்றாத மகேந்திரன் | பிளாஷ்பேக்: சினிமாவை உதறிவிட்டு ராணுவத்திற்கு சென்ற நடிகர் | மீண்டும் கைகோர்க்கும் 'பேட்ட' கூட்டணி | ‛லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படப்பிடிப்பு நிறைவடைந்தது | ஓடிடி-யில் கலக்கும் ஜி.வி பிரகாஷ் குமாரின் 'கிங்ஸ்டன்' | பூரி ஜெகன்நாத் உடன் இணைவது குறித்து விஜய் சேதுபதி | கிரிக்கெட் வீரராக களமிறங்கும் ஆதி | 'ஆர்ஆர்ஆர்' டிரைலரை முந்திய 'ஹிட் 3' |
இந்திய சினிமாவின் இளம் பெண் இயக்குனர் பாயல் கப்பாடியா. பரபரப்பான குறும்படங்கள் மூலம் பேசப்பட்ட இவர் 'எ நைட் ஆப் நோவிங் நத்திங்' என்ற படத்தின் மூலம் மேலும் புகழ்பெற்றார். தற்போது இவர் இயக்கி உள்ள படம் 'ஆல் வி இமேஜின் அஸ் லைட்'. இதில் 'தக்ஸ்' படத்தில் நாயகனாக நடித்த ஹிருது ஹாரூன் நாயகனாக நடித்துள்ளார். அவருடன் கனி குஸ்ருதி, திவ்யா பிரபா, சாக்யாக கதம் ஆகியோரும் நடித்துள்ளனர்.
இந்த படம் வருகிற 23ம் தேதி கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட இருக்கிறது. இதோடு போட்டி பிரிவிலும் இடம் பெறுகிறது. உலகளவில் பிரபலமான பெரும் படைப்பாளிகளான பிரான்ஸ் போர்டு கப்போலா மற்றும் டேவிட் ரோஹன் ஆகியோரின் படைப்புகளுடன் இப்படம் போட்டியிடுகிறது.
ஹிருது ஹாரன் விஜய் சேதுபதி நடிப்பில், சந்தோஷ் சிவன் இயக்கிய 'மும்பைக்கார்' படத்திலும், வெப்சீரிஸிலும் நடித்துள்ளார். தற்போது வெற்றிமாறன் தயாரிப்பில் ஒரு தமிழ் படத்திலும், முஸ்தபா இயக்கத்தில் ஒரு படத்திலும், நடித்து முடித்துள்ளார்.