பாலாஜி மோகன், அர்ஜுன் தாஸ் இணையும் ‛லவ்' | சூரியை கதாநாயகனாக வைத்து படம் இயக்கும் சுசீந்திரன் | கோர்ட் ஸ்டேட் vs நோ படி படத்தின் தமிழ் ரீமேக் புதிய அப்டேட் | 2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? | அக்கா, தங்கை, அம்மாவாக நடிப்பேன்: ரஜிஷா விஜயன் | அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் பதிவுடன் ஆரம்பம் | அன்றும்... இன்றும்... மணிகண்டனின் தன்னம்பிக்கைப் பதிவு | சினிமா வருமானம் போச்சு: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சுரேஷ் கோபி முடிவு |
பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே, திஷா பதானி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் கல்கி 2898 ஏடி. நாக் அஸ்வின் இயக்கி உள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். வருகிற ஜூன் 27ம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். அதில், இந்த படத்தில் பிரபாஸின் நண்பனாக புஜ்ஜி என்ற ஒரு ரோபோ நடித்திருக்கிறது. அந்த ரோபோவுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் டப்பிங் கொடுத்திருக்கிறார் என்று அறிவித்துள்ளார்கள். அதோடு இந்த புஜ்ஜி என்ற ரோபோவை வருகிற 22ம் தேதி அறிமுகப்படுத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்கள்.