ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
கடந்த 2022-ல் கன்னடத்தில் ரக்ஷித் ஷெட்டி நடிப்பில் வெளியான படம் '777 சார்லி'. ஒரு நாய்க்கும் ஒரு இளைஞனுக்குமான பிணைப்பும் அவர்களது இலக்கில்லாத பயணமும் தான் இந்த படத்தின் கதையாக உணர்வுப்பூர்வமாக சொல்லப்பட்டிருந்தது. இந்த படத்தை கிரண்ராஜ் என்பவர் இயக்கி இருந்தார். பாபி சிம்ஹா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கன்னடத்தில் வெளியான இந்த படம் கேஜிஎப், காந்தாரா படங்களை தொடர்ந்து தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நல்ல வரவேற்பை பெற்றது.
கடந்த வருடம் சிறந்த கன்னட படத்திற்கான தேசிய விருதையும் இந்த படம் பெற்றது. இந்த நிலையில் இந்த படம் ஜப்பானிய மொழியிலும் திரையிடப்பட தயாராகி வருகிறது. வரும் ஜூன் 28ம் தேதி ஜப்பானில் இருந்த படம் ரிலீஸ் ஆகும் என தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தை ஜப்பானின் புகழ் பெற்ற பழமை வாய்ந்த நிறுவனமான சோச்சிக்கு மூவி வெளியிடுகிறது.