பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் | அருண் விஜய் படத்திற்கு பாடல் பாடிய தனுஷ் | அமெரிக்காவில் ஏப்., 9ல் குட் பேட் அக்லி பிரீமியர் காட்சி | முதல் கடார் என் சினிமாவை மூடியது... இண்டாவது கடார் திறந்து வைத்தது : சன்னி தியோல் | அண்ணன் கடனை என்னால் அடைக்க முடியாது: கோர்டில் நடிகர் பிரபு தகவல் | பிளாஷ்பேக்: சமகாலத்தில் எடுக்கப்பட்டு சாதனையையும், வேதனையையும் சந்தித்த இரண்டு “ஞானசௌந்தரி”கள் | 'ரெட்ரோ' டப்பிங் பணிகளை நிறைவு செய்த சூர்யா |
அன்னபூரணி படத்தை அடுத்து தி டெஸ்ட், மண்ணாங்கட்டி உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா. தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் மகன்களுடன் வெளிநாடு டூர் சென்ற புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வந்த நயன்தாரா, தற்போது தனது நண்பர்களுடன் நள்ளிரவு நேரத்தில் சாலையில் காரை நிறுத்திவிட்டு ஐஸ்கிரீம் சாப்பிட்ட போது எடுத்துக் கொண்ட ஒரு வீடியோவையும் இணையத்தில் வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில், ஒரு ஆண் நண்பர், அதே சாலையின் எதிரில் இருக்கும் கடையில் நயன்தாராவின் விளம்பரம் படத்தை பார்த்துக் கொண்டே அருகில் நிற்கும் தோழியிடம், உனக்கு நயன்தாராவை பார்க்க வேண்டும் போல் உள்ளதா? என்று கேட்கிறார். அதற்கு அவர் ஆமாம் என்று கூறுகிறார். அப்போது தங்கள் அருகிலேயே நயன்தாரா ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருப்பதை பார்க்கும் அந்த பெண் ஆச்சரியத்துடன் அவரைப் பார்த்து மேம் என்றபடி ஓடி வருகிறார். இவர்கள் இருவருமே நயன்தாராவுடன் இணைந்து ஐஸ்கிரீம் சாப்பிட சென்றவர்கள்தான். ஒரு ஜாலிக்காக இப்படி ஒரு வீடியோவை உருவாக்கி வெளியிட்டுள்ளார்கள். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.