ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
லிங்குசாமி இயக்கிய ரன் படம் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை மீரா ஜாஸ்மின். அதை தொடர்ந்து விஜய், அஜித் படங்களில் கதாநாயகியாக நடித்தவர். சண்டக்கோழி படத்தின் மூலம் இன்னும் பிரபலமானார். இந்த நிலையில் மீரா ஜாஸ்மினின் தந்தை ஜோசப் நேற்று காலமானார். 83 வயதான இவர் வயோதிகம் காரணமாக மரணத்தை தழுவியுள்ளார். இவரது இறுதிச் சடங்கு வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.
தனது தந்தையின் இளமைக்கால புகைப்படம் உள்ளிட்ட சில புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள மீரா ஜாஸ்மின், “நாம் மீண்டும் சந்திக்கும் வரை..” என்று உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.
மீரா ஜாஸ்மினின் தந்தை ஜோசப் ஆரம்ப காலகட்டங்களில் மும்பையில் வசித்தவர், அதன்பின் அப்படியே ஆந்திராவிற்கு இடம் பெயர்ந்து திருமலாவிலும் வசித்துள்ளார். அதன்பிறகு கேராளவில் எர்ணாகுளத்திற்கு வந்து செட்டில் ஆகிவிட்டார். இவருக்கு மீரா ஜாஸ்மின் தவிர இரண்டு ஆண்கள் இரண்டு பெண்கள் என இன்னும் நான்கு வாரிசுகள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.