அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
தெலுங்கு சினிமா ரசிகர்களை மட்டுமல்லாது மற்ற மொழி ரசிகர்களையும் கவர்ந்தவர் விஜய் தேவரகொண்டா. அவர் நடித்துள்ள 'பேமிலி ஸ்டார்' படம் இன்று திரைக்கு வந்துள்ளது. தமிழிலும் டப்பிங் ஆகி வெளியாகும் இப்படத்திற்காக சென்னை வந்து கூட புரமோஷன் செய்தார் விஜய் தேவரகொண்டா.
இப்படத்திற்காக சமூக வலைத்தளங்களிலும் தனியாக பதிவிட்டு வருகிறார். நேற்று 'எனது ஸ்டார்' என அவரது அப்பா பற்றி நெகிழ்ச்சியாகப் பதிவிட்டு, சில புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
“வாழ்க்கை என்பது முழுவதுமாக மேடுகளும் பள்ளங்களும் நிறைந்தது. ஆனால், அது எதை சேமித்து வைக்கிறது என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், உங்களை பெருமைப்படுத்தவும், மகிழ்ச்சியாகவும் வைத்துக் கொள்ள நான் தினமும் உழைக்கிறேன். ஐ லவ் யு மை சூப்பர் ஸ்டார்.
எங்கள் வாழ்க்கையில் உள்ள நட்சத்திரங்களைக் கொண்டாடுவதற்காக நாங்கள் 'பேமிலி ஸ்டார்'ஐ உருவாக்கினோம். இந்தப் படத்தை யாருக்காக உருவாக்கினோமோ அந்த மனிதரைப் பற்றிய பிளாஷ்பேக் ஒன்றைப் பகிர்கிறேன்.
குடும்பத்திற்காகப் போராடும் ஒவ்வொரு ஆண், பெண், பையன், பொண்ணு ஆகியோருக்கு இந்தப் படத்தை சமர்ப்பிக்கிறோம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
அவர் பகிர்ந்துள்ள புகைப்பட வீடியோவில், “எனது பேமிலி ஸ்டார், நீங்கள் இல்லாமல் இன்று நான் இல்லை. குழந்தையாக எனது முதல் அடி, இன்று வரையில் நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்குப் பின்னும் நீங்கள் என் பின்னால் நிற்கிறீர்கள், பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் நிறைய போராடினீர்கள், அதனால் நான் எதுவும் செய்ய வேண்டியதில்லை, உங்கள் மகிழ்ச்சியை நீங்கள் தியாகம் செய்தீர்கள், அதனால் நான் மகிழ்வாக இருக்கிறேன்.
நீங்கள்தான் எனது முதல் நண்பன், நீங்கள்தான் எனது முதல் ஹீரோ, நீங்கள்தான் எனது வலிமை, நான் உங்களை காயப்படுத்தினாலோ, உங்களை கீழே விழ வைத்தாலோ, என்னை மன்னித்துவிடுங்கள். உங்களுக்குத் தெரியும் நான் உங்களை எவ்வளவு நேசிக்கிறேன் என்று. உங்களை பெருமைப்படுத்துவதே எனது முதல் வெற்றி, நீங்கள்தான் எப்போதுமே எனது பேமிலி ஸ்டார்,” என நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.