ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | காதலில் கரைபவர் வெகு சிலரே : தனுஷின் ‛தேரே இஷ்க் மே' டீசர் வெளியீடு | கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்' | படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் | சிம்பு மீது அதிருப்தியில் தமன்? | மீண்டும் இணையும் மதகஜராஜா கூட்டணி | சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி |
தமிழ் சினிமா மட்டும் இந்த ஆண்டில் தடுமாறிக் கொண்டிருக்க, மற்ற தென்னிந்திய மொழி சினிமாக்களில் குறைந்த பட்சம் ஒரு சில படங்களாவது வசூலை அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. தெலுங்கில் கடந்த வாரம் வெளியான 'தில்லு ஸ்கொயர்' என்ற படம் 80 கோடி வசூலைக் கடந்துள்ளது.
மாலிக் ராம் இயக்கத்தில், சித்து ஜொன்னலகட்டா, அனுபமா பரமேஸ்வரன் மற்றும் பலர் நடித்துள்ள இந்தப் படம் தெலுங்கு ரசிகர்களுக்கு மிகவும் என்டர்டெயின்மென்ட் ஆக அமைந்துள்ளது. காமெடியும், கிளாமருமாக நகரும் படத்தில் முத்தக் காட்சிகளுக்கும் பஞ்சம் இல்லாமல் இருக்கிறது.
2022ல் வெளிவந்த 'டிஜே தில்லு' படத்தின் இரண்டாம் பாகமாக இப்படம் வெளிவந்துள்ளது. இரண்டாம் பாகத்தில் இயக்குனரும் வேறு, கதாநாயகியும் வேறு. முதல் பாகம் 30 கோடி வசூலைக் கடந்தது. ஆனால், இரண்டாம் பாகம் 100 கோடி வசூலைக் கடக்க வாய்ப்புள்ளது.
இப்படத்தின் நாயகன் நடிப்பதோடு கதை, திரைக்கதை, வசனம் எழுதுவதிலும், படத்தொகுப்பு செய்வதிலும் பணியாற்றியவர். இப்படத்தை ரவி ஆண்டனியுடன் இணைந்து எழுதியுள்ளார். இவர் தமிழில் 2014ல் வெளிவந்த 'வல்லினம்' என்ற படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.