2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? | அக்கா, தங்கை, அம்மாவாக நடிப்பேன்: ரஜிஷா விஜயன் | அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் பதிவுடன் ஆரம்பம் | அன்றும்... இன்றும்... மணிகண்டனின் தன்னம்பிக்கைப் பதிவு | சினிமா வருமானம் போச்சு: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சுரேஷ் கோபி முடிவு | மனநல தூதர் ஆனார் தீபிகா | திருத்தங்களுடன் வெளிவருகிறது 'அஞ்சான்' | எனக்கு படங்கள் இல்லையா? : மொய் விருந்தில் ஆவேசமான ஐஸ்வர்யா ராஜேஷ் |
காதல் படங்களாகட்டும் ஆக்ஷன் படங்களாகட்டும் தனக்கென ஒரு ஸ்டைலிஷான பாணியல் படங்களை இயக்கி வருபவர் கவுதம் மேனன். அதனால் இவரது படங்களுக்கு என்று தனியாக ஒரு ரசிகர் வட்டம் உண்டு. அந்த வகையில் இவரது இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி நீண்ட நாட்களாக ரிலீஸாக காத்திருக்கும் துருவ நட்சத்திரம் படமும் அப்படி ஒரு ஸ்டைலிசான ஆக்ஷன் படமாக உருவாகி இருக்கிறது. விரைவில் அந்த படம் வெளியாகவும் இருக்கிறது.
இந்த படத்தின் ரிலீஸ் வெற்றிகரமாக நடந்த பிறகு தான் தனது அடுத்த படங்களில் கவனம் செலுத்த போவதாக கூறியுள்ளார் கவுதம் மேனன். மேலும் தனது கனவுப்படம் என்று 'துப்பறியும் ஆனந்த்' என்கிற ஒரு டிடெக்டிவ் கதையை உருவாக்கி வைத்திருப்பதாகவும் சிறுவயதிலிருந்தே அதுபோன்ற கதை மீது தனக்கு மிகப்பெரிய ஆர்வம் இருப்பதாகவும் அதைத்தான் தனது கனவுப்படமாக இயக்க உள்ளதாகவும் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.