மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
நடிகர் அஜித் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் ‛விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். நாயகியாக த்ரிஷா நடிக்க, முக்கிய வேடங்களில் அர்ஜூன், ஆரவ் நடிக்கின்றனர். ஆக் ஷன் கதைக் களத்தில் தயாராகி வரும் இந்த படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடக்கிறது.
இந்த படத்திற்கு அடுத்தப்படியாக அஜித்தின் 63வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குவதாகவும், தெலுங்கு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பதாகவும் தகவல்கள் வந்தன. இந்நிலையில் இந்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
படத்திற்கு ‛குட் பேட் அக்லி' என பெயரிட்டுள்ளதாக போஸ்டர் வெளியிட்டுள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். போஸ்டரில் முள் வேலி, துப்பாக்கி போன்ற குறியீடுகள் இடம் பெற்றுள்ளன. இதை பார்க்கையில் இந்தபடமும் ஆக் ஷன் கலந்த கேங்ஸ்டர் படமாக இருக்கலாம் என தெரிகிறது. அடுத்தாண்டு பொங்கல் வெளியீடு என இப்போதே படத்தின் ரிலீஸ் தேதியையும் அறிவித்துள்ளனர்.
சமீபத்தில் காதுக்கு கீழே சிறிய ஆபரேஷன் செய்து கொண்ட அஜித் ஓய்வில் உள்ளார். ‛விடாமுயற்சி' படத்திற்காக மீண்டும் அஜர்பைஜான் பறக்க உள்ளார். ‛விடாமுயற்சி' படத்தை முடித்ததும் ‛குட் பேட் அக்லி' படப்பிடிப்பில் அஜித் கலந்து கொள்ள உள்ளார்.