குட் பேட் அக்லி : ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு இளையராஜா நோட்டீஸ் | 4கே தொழில்நுட்பத்தில் மீண்டும் வெளியாகும் 'கேப்டன் பிரபாகரன்' | தூசி தட்டப்படும் 'இடி முழக்கம்' | எந்த படப்பிடிப்புக்கும் செல்ல மாட்டோம் : அவுட்டோர் யூனிட் யூனியன் அறிவிப்பு | 'கேங்கர்ஸ்' படத்துக்கு வரும் புது சிக்கல் | பிளாஷ்பேக் : ஒரே வருடத்தில் 18 படங்களில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக் : மூன்று வேடங்களில் நடித்த ஹோன்னப்ப பாகவதர் | அஜித்தின் அடுத்த படம்: சஸ்பென்ஸாக இருக்கும் நிறுவனம் | அஜித்தின் 'டாப் வசூல்' படமாக மாறுமா 'குட் பேட் அக்லி' | நடிகர் நானிக்கு ஓடிடி-யில் அடித்த ஜாக்பாட் |
தமிழ் திரைப்பட முன்னணி நடிகர் அஜித்குமார், 52. துணிவு படத்தை தொடர்ந்து, மகிழ்திருமேனி இயக்கத்தில், விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடக்கிறது. மகனின் பிறந்தநாளுக்காக சென்னை வந்த அஜித், குடும்பத்தினருடன் பிறந்தநாளை கொண்டாடினார்.
மீண்டும் படப்பிடிப்புக்கு வெளிநாடு செல்லவிருந்த நிலையில், திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலைப்பற்றி பல்வேறு விதமான தகவல்கள் பரவி வந்தன. குறிப்பாக மூளையில் ஏதோ பிரச்னை என்றும் ஆபரேஷன் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் பரவின. ஆனால் அஜித் தரப்பு இதனை மறுத்துள்ளனர்.
தற்போது கிடைத்துள்ள தகவல்படி அஜித்தின் காதுக்கு கீழே உள்பகுதியில் சின்ன பல்ஜ் எனப்படும் புடைப்பு கண்டறியப்பட்டது. இதனால் பாதிப்பு ஏதுவும் இல்லையாம். நேற்றே அந்த பல்ஜ் அரை மணிநேரத்தில் நீக்கப்பட்டு நேற்றிரவே சாதாரண வார்டுக்கு அஜித் வந்துவிட்டாராம். இந்த மைனர் ஆபரேஷனால் அவரின் எந்த பணியும் பாதிப்படையாது என்பது தான் உண்மை. இன்று இரவோ அல்லது நாளையோ வீடு திரும்புவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திட்டமிட்டப்படி ‛விடாமுயற்சி' படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக அஜித் அடுத்தவாரமே அஜர்பைஜான் கிளம்ப உள்ளாராம்.
அஜித் நலம்பெற இபிஎஸ் வாழ்த்து
அ.தி.மு.க., பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‛‛மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சகோதரர், நடிகர் அஜித்குமார் விரைவில் பூரண நலம் பெற வாழ்த்துகிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.