தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
எஸ்.ஆர்.புரொடக்ஷன் சார்பில் பி.ஜகதீஷ் தயாரிக்கும் படம் 'மெட்ராஸ்காரன்'. 'ரங்கோலி' படத்தின் இயக்குநர் வாலி மோகன்தாஸ் இயக்குகிறார். மலையாள நடிகர் ஷேன் நிகாம் இந்த படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார். விஜய் சேதுபதி ஜோடியாக 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' படத்தில் நடித்த நிஹாரிகா நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழில் நடிக்கிறார். இவர்கள் தவிர, கலையரசன், ஐஸ்வர்யா தத்தா, கருணாஸ், பாண்டியராஜன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். சாம் சி.எஸ் இசை அமைக்கிறார். இதன் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.
படம் பற்றி இயக்குனர் வாலிமோகன்தாஸ் கூறும்போது, “தயாரிப்பாளருக்கு என் முதல் நன்றி. ரங்கோலி படம் பார்த்துக் கூப்பிட்டார். கதை சொன்ன 5 நிமிடத்தில் இந்தப்படம் செய்ய ஒத்துக் கொண்டார். ஷேன் நிகாமை சந்தித்ததே மறக்க முடியாத அனுபவம், அவர் தமிழில் நடிக்க ஒத்துக்கொண்டதற்கு நன்றி. ஐஸ்வர்யா தத்தாவால்தான் இந்தப்படம் ஆரம்பித்தது அவருக்கு என் நன்றி. நிஹாரிகாவுக்கு இப்படத்தில் நல்ல கதாப்பாத்திரம். ஒரு சிறு ஈகோ, ஒருவனின் வாழ்வை எந்த எல்லைக்கு கூட்டிச்செல்லும் என்பதே இப்படத்தின் மையம். படப்பிடிப்பை சென்னை, மதுரை, கொச்சி ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளோம்'' என்றார்.