ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
ரோஜாவனம், ராமகிருஷ்ணா உள்பட பல படங்களில் ஹீரோவாக நடித்தவர், ஜெய் ஆகாஷ். ஏராளமான தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். ஆயுதப்போராட்டம், ஜெய் விஜயம், காதலன் காதலி, காதலுக்கு கண்ணில்லை, உள்பட சில படங்களை இயக்கி நடித்துள்ளார். தற்போது தயாரித்து இயக்கி நடித்துள்ள படம், 'மாமரம்'. கிகி வாலஸ், 'காதல்' சுகுமார், பிரம்மானந்தம், ராகுல் தேவ் நடித்துள்ளனர். பால் பாண்டி ஒளிப்பதிவு செய்துள்ளர், பாடல்களுக்கு நந்தா இசை அமைத்துள்ளார். சதீஷ் குமார் பின்னணி இசை அமைத்துள்ளார்.
படம் குறித்து ஜெய் ஆகாஷ் கூறும்போது “இது எனது சொந்த காதல் கதை. நான் லண்டனில் வசித்தபோது ஒரு பெண்ணை தீவிரமாக காதலித்தேன். அவரும் என் மீது உயிராக இருந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் என்னைவிட வசதியும், புகழும் அதிகம் கொண்ட ஒருவர் கிடைத்ததும் எனது காதலை உதறிவிட்டு சென்று விட்டார். அந்த கதையைத்தான் படமாக எடுத்துள்ளேன்.
அடிப்படையில் அவர் நல்லவர். அதனால் படத்திலும் அவரை நல்லவராக காட்டி இருக்கிறேன். அவரை காதலித்தபோது இருவரும் சேர்ந்து ஒரு மாமர செடியை நட்டு வைத்தோம், அந்த செடி இப்போது மரமாகி இருக்கிறது. அந்த செடியை வைத்ததில் இருந்து படத்தை தொடங்கி இப்போது வரை எனக்கு ஏற்பட்ட நினைவுகளை அவ்வப்போது படமாக்கி இப்போது முடித்திருக்கிறேன்” என்றார்.