எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
பிரசாந்த் நீல் இயக்கத்தில், பிரபாஸ், பிருத்விராஜ், ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிப்பில் ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் நேற்று வெளியாகி உள்ள படம் 'சலார்'. இப்படத்தின் முதல் நாள் வசூல் 150 கோடியைக் கடந்திருக்கலாம் என சில அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
வட இந்தியாவில் பல மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் இப்படத்தைத் திரையிட சிக்கலை ஏற்படுத்தினார்கள் என இரு தினங்களுக்கு முன்பு குற்றச்சாட்டு எழுந்தது. சிங்கிள் ஸ்கிரீன்களில் மட்டுமே இப்படம் வெளியாகி உள்ளது. தமிழகத்திலும், கேரளாவிலும் படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பைப் பெறவில்லை என்றும் சொல்கிறார்கள்.
தெலுங்கு மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் மட்டும் முதல் நாள் வசூலாக 100 கோடியையும், மற்ற மாநிலங்கள், வெளிநாடுகள் வசூல் ஆகியவற்றைச் சேர்த்து இப்படம் 150 கோடி வசூலைப் பெற்றிருக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
2023ம் ஆண்டில் இந்தியாவில் இதுவரையில் வெளிவந்த படங்களில் 'லியோ' படம் 148 கோடி ரூபாய் பெற்று முதலிடத்தில் உள்ளது. அந்த சாதனையை தற்போது 'சலார்' முறியடிக்க வாய்ப்புள்ளதாம்.
தயாரிப்பு நிறுவனம் இன்னும் முதல் நாள் வசூல் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடாத நிலையில் பிரபாஸ் ரசிகர்கள் பலரும் 150 கோடி, 160 கோடி, 180 கோடி என அவர்கள் விருப்பத்திற்கு ஒரு தொகையையும் கூறி வருகிறார்கள்.