லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
ஐ இண்டர் நேஷனல் நிறுவனம் சார்பில் பிரபல கராத்தே வீரர் இஷாக் உசைனி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி, தயாரித்து, நடித்துள்ள படம் 'பூகம்பம்'. இதில் தில்சானா, ஹேமா, ரிஷ்ஷத் உள்பட பலர் நடித்துள்ளனர். தாமஸ் ரத்தினம் இசையையும், தயாள் ஓஷோ மற்றும் தேவராஜ் ஒளிப்பதிவையும் கவனித்துள்ளனர்.
படம் பற்றி இயக்குனர் இஷாக் உசைனி கூறும்போது, "பிச்சை எடுப்பதில் பல வகை உண்டு. இதில் தேர்தல் பிச்சையை பற்றி கூறி இருக்கிறேன். தமிழகத்திலும் ஐரோப்பிய நாடுகளிலும் குறிப்பாக போலந்து நாட்டில் அதிகமாக படப்பிடிப்பு நடத்தி இருக்கிறேன். "ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தாலும் விட மாட்டேன்"னு சொல்லி வில்லனுக்கும் , நாயகிக்கும் இடையில் நாயகனாக நான் ஆடும் அதிரடி ஆக்ஷனுடன் தேர்தல் கிரைம் திரில்லராக இந்த படத்தை இயக்கி உள்ளேன்" என்கிறார்.