ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் ஆகியோருடன் போட்டி போட்டு தனக்கென தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கியவர்களில் முதன்மையானவர் விஜயகாந்த். அரசியலும் இறங்கி தனி கட்சி ஆரம்பித்து எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவி வகித்தவர். கடந்த சில வாரங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துமனையில் சிகிச்சை பெற்ற பின் வீடு திரும்பினார்.
இன்று(டிச., 14) அவரது கட்சியான தேமுதிகவின் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் உட்கார கூட முடியாத சூழலில் இருக்கும் விஜயகாந்த்தை நாற்காலியில் அமர வைத்து கூட்டத்தை நடத்தினார்கள். சரியாக உட்கார முடியாமல் சாய்ந்து விழப் போன விஜயகாந்தை இருவர் உடனே தாங்கிப்பிடிப்பதற்காக பின்புறமே நின்றிருந்தனர்.
அந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி விஜயகாந்த் மீது பரிதாபத்தை வரவழைத்திருக்கிறது. இப்படியெல்லாம் அவரைத் துன்புறுத்த வேண்டாமென பலரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
திரைப்பட இயக்குனரான பாண்டிராஜும் அவரது கவலையையும், கோரிக்கையையும் பகிர்ந்துள்ளார். “கேப்டன் திரு. விஜயகாந்த் அவர்களுக்கு , இப்பொழுது சரியான ஓய்வு தேவை . அவர் பூரண குணமடையும்வரை அவரை இப்படியெல்லாம் கஷ்ட்டப்படுத்தாதீர்கள் ப்ளீஸ்... பிடித்த ஒரு 'நல்ல மனிதரை ' இப்படி பார்க்க ரொம்பவே கஷ்ட்டமா இருக்கு,” எனப் பதிவிட்டுள்ளார்.