சகலகலா வல்லவன் ‛ஹேப்பி நியூர்' பாடலை படமாக்கிய ஒளிப்பதிவாளர் பாபு காலமானார் | டிச., 25ல் சிறை ரிலீஸ் : உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட விக்ரம் பிரபு படம் | இமயமலை பயணத்தை நிறைவு செய்த ரஜனிகாந்த் | விஜய் தேவரகொண்டா ஜோடியாக கீர்த்தி சுரேஷ் | 2024 தேசிய விருதுகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியீடு | 'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் |
எஸ்.ஆர்.பிலிம் பேக்ட்ரி சார்பில் எஸ்.ஆர்.ராஜன் தயாரித்து, இயக்கியுள்ள படம் 'இ-மெயில்'. இப்படத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகை ராகினி திவேதி கதாநாயகியாக நடிக்க, கதாநாயகனாக 'முருகா' அசோக்குமார் நடித்துள்ளார். இரண்டாவது கதாநாயகியாக போஜ்புரி நடிகை ஆர்த்தி ஸ்ரீ நடிக்க, இரண்டாவது கதாநாயகனாக ஆதவ் பாலாஜி நடித்துள்ளார். மறைந்த நடிகர் மனோபாலா மற்றும் லொள்ளு சபா மனோகர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
அவினாஷ் கவாஸ்கர் பாடல்களுக்கு இசையமைக்க, ஜுபின் பின்னணி இசை அமைத்திருக்கிறார். செல்வம் முத்தப்பன் ஒளிப்பதிவை கவனித்துள்ளார். தமிழ், கன்னடம் என இரு மொழிகளில் இப்படம் உருவாகி உள்ளது
ஆன்லைன் விளையாட்டு மோசடியை அம்பலப்படுத்தும் வகையில் அதேசமயம் காமெடி, ஆக்ஷன், சென்டிமென்ட் கலந்த சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகியுள்ள படம் இது. இதன் பஸ்ட் லுக் போஸ்டர் இயக்குனர் அமீர் வெளியிட்டார் படம் விரைவில் திரைக்கு வருகிறது.