தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

இறுதிச்சுற்று படத்தில் நாயகியாக அறிமுகமானவர் குத்துச் சண்டை வீரங்கானையான ரித்திகா சிங். தொடர்ந்து ‛ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, கொலை' போன்ற படங்களில் நடித்தார். தற்போது ஞானவேல் இயக்கும் ரஜினியின் 170வது படத்தில் நடிக்கிறார். இந்நிலையில் படப்பிடிப்பில் இவருக்கு கைகளில் காயம் ஏற்பட்டுள்ளது. அந்த போட்டோவை பகிர்ந்து, ‛‛இதை பார்க்கையில் நான் ஒரு ஓநாய் உடன் சண்டை போட்டது போல் தெரிகிறது'' என குறிப்பிட்டுள்ளார்.
இன்னொரு வீடியோவில், ‛‛அங்கு கண்ணாடி இருக்கிறது கவனமாக இருங்கள் என்றார்கள். நான் பொருட்படுத்தவில்லை. சில நேரம் நம்மால் வேகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. நான் கட்டுப்பாட்டை இழந்ததால் இப்படி நிகழ்ந்தது. வலிக்கவில்லை என்றாலும் காயம் ஆழமாக இருக்கிறது. மருத்துவமனை செல்கிறேன், விரைவில் சரியாகும் என நம்புகிறேன்'' என தெரிவித்துள்ளார்.
எந்த படப்பிடிப்பில் இது நிகழ்ந்தது என ரித்திகா சிங் குறிப்பிடவில்லை. ஆனால் இது ரஜினி படத்தில் நிகழ்ந்த காயம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.