நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு | ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்த அமெரிக்க அதிபரின் மகன் | எதிர்மறை விமர்சனம் எதிரொலி : விலாயத் புத்தா படத்தில் 15 நிமிட காட்சிகள் நீக்கம் | ஜோசப் ரீமேக்கை பார்க்காமலேயே தர்மேந்திரா மறைந்து விட்டார் : மலையாள இயக்குனர் வருத்தம் | ஆஸ்கர் நாமினேஷனில் 'மகா அவதார் நரசிம்மா' | நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... |

'மாநகரம்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். அதன்பின் 'கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ' ஆகிய ஐந்து படங்களை இதுவரை இயக்கியுள்ளார். அடுத்து ரஜினிகாந்த்தின் 171வது படத்தை இயக்க உள்ளார்.
லோகேஷ் கனகராஜ் தற்போது புதிய படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். அதற்கு 'ஜி ஸ்குவாட்' எனப் பெயர் வைத்துள்ளார். அந்த லோகோவில் தேள் படம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
நிறுவனத்தில் முதலில் நெருங்கிய நண்பர்கள், உதவியாளர்கள் ஆகியோரை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப் போவதாகத் தெரிவித்துள்ளார். விரைவில் தனது முதல் தயாரிப்பு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வெற்றிகரகமாக வலம் வரும் இளம் இயக்குனர்கள் சிலர் இப்படி சொந்தமாக படத் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்குவது சிறப்பான ஒன்று.