விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா | கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி பண்றோம் : ஆர்.ஜே. பாலாஜி | பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள் | திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் ஆன பாவனா |
பொன்னியின் செல்வன் படங்களின் வெற்றிக்கு பிறகு விக்ரம் நடிப்பில் வெளியாக உள்ள படம் ‛தங்கலான்'. பா.ரஞ்சித் இயக்கி உள்ள இதில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டோர் முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தின் டீசரை இன்று(நவ., 1) காலை 11:30 மணியளவில் வெளியிட்டனர்.
1:32 நிமிடங்கள் ஓடும் இந்த டீசரில் வசனங்களே இல்லை. முழுக்க முழுக்க சரித்திர பின்னணியில் இருப்பது போன்று உள்ளது. விக்ரம், மாளவிகா உள்ளிட்ட ஒவ்வொருவரின் தோற்றமும் வித்தியாசமாக உள்ளது. சண்டைக்காட்சிகள், கைகளாலேயே பாம்பை இரண்டாக விக்ரம் பியித்து எறியும் காட்சி, விக்ரமின் உடலில் சாரல் போன்று பீறிட்டு அடிக்கும் ரத்தம் போன்ற காட்சிகள் டீசரில் இடம் பெற்றுள்ளன. டீசரின் இறுதியில் தரை முழுக்க படர்ந்து இருக்கும் தங்கம் படம் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதோடு டீசரின் முடிவில் ‛தங்க மகனின் எழுச்சி' என குறிப்பிட்டுள்ளனர்.
கோலார் தங்க வயல் பின்னணியில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்வியல் பின்னணியில் இந்த படம் உருவாகி உள்ளதாக கூறப்பட்டது. தற்போது டீசரும் தங்கத்தை பின்னணியாக வைத்து நடக்கும் கதைக்களத்தை பிரதிபலிப்பதால் அந்த கதையாக இருக்கலாம் என தெரிகிறது. வரும் ஜன., 26ல் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் ரிலீஸாகிறது.