ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
ரஜினிகாந்த் நடித்த 'சந்திரமுகி' படத்தில் இடம்பெற்ற 'ரா..ரா.. சரசுக்கு ரா..ரா..' என்ற புகழ்பெற்ற பாடலையே படத்தின் தலைப்பாக்கி ஒரு படம் தயாராகி உள்ளது. இந்தப் படத்தை ஸ்கை வாண்டர்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஏ.ஜெயலட்சுமி தயாரித்துள்ளார். கேஷவ் தெபுர் இயக்கியிருப்பவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒரியா, பெங்காலி என்று இந்திய மொழிகளில் சுமார் 350 திரைப்படங்களில் நடன இயக்குநராகப் பணி புரிந்திருக்கிறார்.
கார்த்திக், காயத்ரி பட்டேல், பாலா, மாரி வினோத், காட்பாடி ராஜன், விஸ்வா, ரவிவர்மா, அபிஷேக், பெஞ்சமின், சிம்ரன், தீபிகா, காயத்ரி, ஜெபி, ஜெயவாணி, அக்ஷிதா ஆகியோர் நடித்துள்ளனர். படம் பற்றி தயாரிப்பாளர் ஏ.ஜெயலட்சுமி கூறியதாவது: இப்படத்தின் கதை ஒரே இரவில் நடக்கிறது. பெல்லாரி ராஜாவும், தாமோதரனும் அரசியலில் ஒன்றாக இருந்து பகைவர்களாக மாறியவர்கள்.
பெல்லாரி ராஜா ஒரு கொலை செய்யும்போது அதை ஒரு பெண் பார்த்து விடுகிறார். அவளை தீர்த்துக்கட்ட பெல்லாரி ராஜா தன் ஆட்களுடன் அவரை துரத்த அந்த பெண் ஒரு லேடீஸ் ஹாஸ்டலுக்குள் நுழைந்து விடுகிறார். பெல்லாரி ராஜா ஆட்களும் நுழைந்து விடுகிறார்கள். கொலைக்கு பழிவாங்க வரும் தாமோதரனும் தனது ஆட்களுடன் லேடீஸ் ஹாஸ்டலுக்குள் நுழைகிறார். அங்கு என்ன நடக்கிறது என்பதுதான் கதை.
இந்த படத்தை தணிக்கைக்கு அனுப்பியோது தணிக்கை அதிகாரிகள் 60 இடத்தில் கட் கொடுத்தார்கள். அதை செய்தால் ஏ சான்றிதழ் தருவதாக சொன்னார்கள். ஆனால் 60 கட் என்றால் கதை பாதிக்கும் என்பதால் மும்பைக்கு சென்று மறுதணிக்கை செய்து குறைவான கட்டுகளுடன் ஏ சான்றிதழ் வாங்கி உள்ளோம். வருகிற நவம்பர் 3ம் தேதி படம் வெளியாகிறது. என்றார்.