ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
நிஜ குத்துச்சண்டை வீராங்கனையான நடிகை ரித்திகா சிங், ‛இறுதிச்சுற்று' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன்பிறகு ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே, கொலை என தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் மட்டும் தேர்தெடுத்து நடித்து வருகிறார்.
ஜெய் பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் தனது 170வது படத்தில் நடிக்கின்றார். லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார் என ஏற்கனவே அறிவித்தனர். வருகின்ற நாட்களில் இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளதால் இந்த படத்தில் நடிக்கும் பிரபலங்களை தற்போது அறிமுகபடுத்தி வருகின்றனர். நடிகை துஷரா விஜயன் இப்படத்தில் நடிப்பதை அறிவித்ததைத் தொடர்ந்து இப்போது நடிகை ரித்திகா சிங் இணைந்துள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.