பயணம் எளிதல்ல! ; மங்காத்தா நடிகைக்கு அஜித் சொன்ன அட்வைஸ் | பழம்பெரும் நடிகையான ‛கன்னடத்து பைங்கிளி' சரோஜாதேவி காலமானார் | சுரேஷ்கோபி படத்துக்கு ஒரு வழியாக யு/ஏ சான்றிதழ் கொடுத்த சென்சார் | அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி |
தனுஷ் நடித்த வாத்தி என்ற படத்தை இயக்கியவர் வெங்கி அட்லூரி. இப்படம் தெலுங்கில் சார் என்ற பெயரில் வெளியானது. தனுசுக்கு ஜோடியாக சம்யுக்தா நடித்த இப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. இந்த நிலையில் வாத்தி படத்தை இயக்கிய வெங்கி அட்லூரி அடுத்து துல்கர் சல்மான் நாயகனாக நடிக்கும் லக்கி பாஸ்கர் என்ற படத்தை இயக்குகிறார். நேற்று இப்படத்தின் பூஜை நடைபெற்ற நிலையில் படப்பிடிப்பும் தொடக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கும் வாத்தி படத்துக்கு இசையமைத்த ஜி.வி.பிரகாஷ் குமாரே இசையமைக்கிறார். சீதா ராமம் ஹிட் படத்துக்கு பிறகு துல்கர் சல்மான் நடிக்கும் இரண்டாவது தெலுங்கு படம் இதுவாகும். இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் குறித்த தகவல் வெளியிடப்படவில்லை.