மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை |
பி.எஸ்.எஸ் புரோடக்ஷன்ஸ் மற்றும் உத்ரா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் 'எண்.6 வாத்தியார் கால்பந்தாட்ட குழு'. சரத் அறிமுக கதாநாயகனாகவும், அயிரா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் கஞ்சா கருப்பு, அருவி மதன், சோனா ஹைடன், நரேன் , இளையா, எஸ் .எம்.டி கருணாநிதி நடித்துள்ளனர். வினோத் ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார், அலிமிர்சா இசை அமைத்துள்ளார். செ.ஹரி உத்ரா இயக்கி உள்ளார். வருகிற 15ம் தேதி வெளிவருகிறது.
படம் பற்றி இயக்குனர் ஹரி உத்ரா கூறும்போது, “கிராமங்களில் இருந்து இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் கால்பந்து விளையாட்டில் முத்திரை பதிக்க துடிக்கும் கூலித் தொழிலாளர்களின் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் எவ்வாறு கால்பந்து விளையாட்டில் தங்களுக்கான இடங்களை திறமையின் மூலம் பிடிக்க முயல்கின்றனர் என்பதை பின்னணியாக வைத்து அதற்கு பின்னால் உள்ள அரசியலை இத்திரைப்படம் பேசுகிறது. அதிகாரவர்க்கம் ஒடுக்கப்பட்டவர்களை எவ்வாறு அவர்களுடைய திறமைகளை ஒடுக்கி அவர்களை தங்களுடைய மேல் நிலையை அடைய முடியாமல் தவிக்கும் போக்கை மேற்கொள்கின்றனர் என்பதை படத்தின் மையக்கருவாக வைத்திருக்கிறேன். பரமக்குடி, மதுரை ,ராம்நாடு பகுதிகளை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட நிஜ கால்பந்து விளையாட்டு வீரர்களை கொண்டு படமாக்ப்பட்டுள்ளது” என்றார்.