படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

ஆர்.கே.சுரேஷ் நடித்த 'பில்லா பாண்டி' படத்தை தயாரித்தவர் கே.சி.பரத். அதன் பின் நடிகராகி புலிக்குத்தி பாண்டி, அங்காரகன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். தற்போது அவரே கதையின் நாயகனாக நடித்து, தயாரிக்கும் படம் 'கருப்பு பெட்டி'. இதை எஸ்.பி.ஜனநாதனிடம் உதவியாளராக இருந்த எஸ்.தாஸ் இயக்குகிறார். மலையாள நடிகை தேவிகா வேனு நாயகியாக நடிக்கிறார். இவர் தவிர சரவண சக்தி, தர்மேஷ், மிதுன் சக்ரவர்த்தி, நிஷா, கீர்த்தி, அனிதா உள்பட பலர் நடித்துள்ளனர். அருண் இசை அமைத்துள்ளார், மோசஸ் டேனியல் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் தாஸ் கூறும்போது: இது காமெடி கலந்த சீரியசான படம். படத்தின் நாயகனுக்கு தான் காணும் கனவுகளை டைரியில் எழுதி வைக்கும் வழக்கம் இருக்கிறது. ஒரு நாள் அதனை அவரது மனைவி படித்து விடுகிறார். அதில் எழுதியிருப்பது அனைத்தும் உண்மை என்ற கருதும் அவர், கணவனை வெறுப்பதோடு அவர் மீது போலீசில் புகாரும் கொடுக்கிறார். தான் எழுதியது அனைத்தும் தான் கண்ட கனவுதான் நிஜமல்ல என்பதை நாயகன் எப்படி நிரூபிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை. என்றார்.