காதலருடன் தீபாவளி கொண்டாடிய சமந்தா | ரூ.66 கோடி வசூலித்த ‛டியூட்' : 'ஹாட்ரிக்' 100 கோடியில் பிரதீப் ரங்கநாதன் | கர்நாடகாவில் 200 கோடி வசூல் சாதனையில் 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படம் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதை அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் தனது 68வது படத்தில் நடிக்கப் போகிறார் விஜய். ஏஜிஎஸ் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இந்த படத்திற்காக அமெரிக்காவில் டெஸ்ட் லுக்கிற்கு சென்றுள்ளார் விஜய். மேலும் அழகிய தமிழ் மகன், பிகில் படங்களுக்கு பிறகு இந்த படத்திலும் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் விஜய். இந்த நிலையில் விஜய் 68வது படத்தின் அறிமுக பாடலை தர லோக்கல் குத்து பாடலாக கம்போஸ் செய்துள்ளாராம் யுவன் சங்கர் ராஜா. அதிலும் நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய்யுடன் இணைந்திருப்பதால் இப்படத்தின் மொத்த பாடல்களையும் சூப்பர் ஹிட்டாக கொடுத்துவிட வேண்டும் என்று யுவன் சங்கர் ராஜா கம்போஸ் செய்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.