அரசியல் பேசி சினிமா நண்பர்களை இழக்க விரும்பவில்லை : ‛உயிருள்ள வரை உஷா' ரீ-ரிலீஸ் நிகழ்வில் டி ராஜேந்தர் பேட்டி | 'மதராஸி' படத்தை வாங்கிய வேல்ஸ் நிறுவனம் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | சினிமாவில் பொறுமை அவசியம் ; நல்ல படங்களுக்காக காத்திருக்கிறேன்... : புதுமுகம் ஜீவிதா! | தம்பதிகளின் உறவுச் சிக்கலை பேசும் ‛மதர்' | சிங்கப்பூரில் மறு தணிக்கை செய்யப்பட்ட 'கூலி' | பிளாஷ்பேக் : நண்பருக்காக சம்பளம் வாங்காமல் நடித்த மோகன் | பிளாஷ்பேக் : அக்கா குடும்பத்திற்காக சினிமாவை துறந்த தங்கை | ஏஆர் முருகதாஸ் ஒரு 'சந்தர்ப்பவாதி' : சல்மான்கான் ரசிகர்கள் விமர்சனம் | ரஜினி, கமல் இணையும் படம் : லோகஷே் கனகராஜ் மாற்றமா? |
தமிழ் சினிமாவில் நிறைய வாரிசு நடிகர்கள், நடிகைகள் இருக்கிறார்கள். ஆனால் நடிகர்களின் வாரிசு இயக்குனர்கள் என நடிகர் ரஜினிகாந்த்தின் மகள்களாக ஐஸ்வர்யா, சவுந்தர்யா ஆகியோர் மட்டுமே இருக்கிறார்கள். “3, வை ராஜா வை” ஆகிய படங்களுக்குப் பிறகு தற்போது 'லால் சலாம்' படத்தை இயக்கி வருகிறார் ஐஸ்வர்யா. 'கோச்சடையான்' படத்தை இயக்கினார் சவுந்தர்யா. அவர்கள் இருவருக்குப் பிறகு வாரிசு இயக்குனராக வந்துள்ளார் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்.
2023ம் ஆண்டு பொங்கலுக்கு விஜய் நடித்து வெளிவந்த படம் 'வாரிசு'. அப்படி ஒரு தலைப்பில் விஜய்யின் படம் வெளிவந்த ஆண்டில் அவரது மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகிறார் என்ற அறிவிப்பு பொருத்தமாக வெளியாகி உள்ளது. தயாரிப்பாளர்களின் வாரிசுகள், இயக்குனர்களின் வாரிசுகள், நடிகர்களின் வாரிசுகள், நடிகைகளின் வாரிசுகள், மற்ற தொழில்நுட்பக் கலைஞர்களின் வாரிசுகள் என தமிழ் சினிமாவில் 'வாரிசுகள்' பட்டியலை எடுத்தால் அது ஒரு நீண்ட பட்டியலாக இருக்கும்.
என்னதான் வாரிசு என்றாலும் திறமை இருந்தால் மட்டுமே இங்கு வெற்றி பெற முடியும். சிலரது வெற்றியை வைத்தும், பலரது தோல்வியை வைத்தும் அதைக் கணக்கிடலாம். விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் அப்பாவைப் போல நடிகராக அறிமுகமாகாமல், தாத்தாவைப் போல இயக்குனராக வருவது ஆச்சரியமான ஒன்று. ஆனாலும், அவரை படம் இயக்க வைப்பதைவிட நடிக்க வைக்கவே பல தயாரிப்பாளர்கள் எதிர்காலத்தில் முயற்சிப்பார்கள். அப்படி ஒரு நிலை வரும்போது சஞ்சய் என்ன முடிவெடுப்பார் என பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.