பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
தமிழில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இயக்குனர் சிவா இந்த படத்தை இயக்கியிருந்தார். தற்போது இந்தப் படத்தின் ரீ-மேக்காக உருவாகியுள்ள போலா சங்கர் என்கிற படத்தில் நடித்துள்ளார் சிரஞ்சீவி. கதாநாயகியாக தமன்னா நடிக்க, சிரஞ்சீவியின் தங்கை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மெஹர் ரமேஷ் என்பவர் இயக்கியுள்ளார். வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. இதை தொடர்ந்து புரமோஷன் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து சிரஞ்சீவி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டு வருகின்றனர்.
சில மாதங்களுக்கு முன்பு வாரிசு பட இசை வெளியீட்டு விழாவில் அதன் தயாரிப்பாளர் தில் ராஜு பேசும்போது, இந்த படத்தில் பைட் வேணுமா இருக்கு, பாட்டு வேணுமா இருக்கு, டான்ஸ் வேணுமா இருக்கு, காமெடி வேணுமா இருக்கு என ஒரு புதிய பாணியில் அந்த படத்தை புரமோட் செய்தார். அவரது அந்த பேச்சு சோசியல் மீடியாவில் மிகப்பெரிய அளவில் வைரலானது.
இந்த நிலையில் சிரஞ்சீவியும் சமீபத்திய டீம் இன்டர்வியூ ஒன்றில் பேசும்போது தில் ராஜு பாணியிலேயே இந்த படத்தில் பாட்டு இருக்கு, பைட்டு இருக்கு, சென்டிமென்ட் இருக்கு என்று சிரிப்பை அடக்க முடியாமல் ஜாலியாக பேசினார். இதை கேட்டு அருகில் அமர்ந்திருந்த கீர்த்தி சுரேஷ் மற்றும் தமன்னா இருவரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். இந்த வீடியோவும் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.