லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பில் வெளியான படம் மாமன்னன். தியேட்டரில் ஓடி முடித்து விட்ட இந்த படம் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் இயக்குனர் பேரரசு அளித்துள்ள ஒரு பேட்டியில், ஒரு விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார். அவர் கூறுகையில், கமல்ஹாசன் முன்னிலையில் தேவர் மகன் படம் பற்றி பேசினார் மாரி செல்வராஜ். அந்த தேவர் சமூகத்திற்குள் என் அப்பா இருந்தால் எப்படி இருக்கும் என்பது தான் இந்த படம் என அவர் கூறினார். அதனால் இந்த படத்தில் வில்லனாக சித்தரிக்கப்பட்ட ரத்னவேல் வேடத்தில் நடித்த பஹத் பாசில் தேவர் சமூகத்தைச் சார்ந்தவர் என்பதை அவரே சொல்லிவிட்டார். ஆனால் இந்த படத்தில் நடித்துள்ள உதயநிதி அரசியலுக்கு வராமல் இருந்திருந்தால் ஜாதிய அடையாளத்தை வெளிப்படுத்தும் இந்த படம் அவருக்கு எந்த பிரச்சனையும் ஏற்படுத்தாது. ஆனால் அவருக்கு எல்லா சாதிக்காரர்களும் ஓட்டு போடுகிறார்கள். அதனால் இது போன்ற ஒரு சாதி படத்தில் அவர் நடித்தது ரொம்ப தவறு என்று தன்னுடைய விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார் இயக்குனர் பேரரசு.