ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு | ரத்தத்தால் அடா சர்மாவின் ஓவியம் வரைந்த ரசிகர் |
காமெடி நடிகராக இருந்த சதீஷ், ‛நாய் சேகர்' படத்தின் மூலம் முதல் முறையாக ஹீரோவாக நடித்தார். இந்தபடம் ஓரளவுக்கு வரவேற்பைப் பெற்றத்தை தொடர்ந்து தற்போது வித்தைக்காரன் என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குனர் வெங்கி இயக்குகிறார். ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் வெங்கட் பரத் இசையமைக்கிறார். ஏற்கனவே படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது. படப்பிடிப்பு நிறைவு பெற்று மற்ற பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் ஜூலை 22ம் தேதி டீசர் வெளியாகிறது என்று படக்குழுவினர்கள் போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர்.