அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
அறிமுக இயக்குனர் ரா.வெங்கட் இயக்கியுள்ள படம் கிடா இந்த படத்தை ஶ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி ரவி கிஷோர், தயாரித்துள்ளார். சில மாதங்களுக்கு முன் மறைந்த பூ ராமு முதன்மை கேரக்டரில் நடித்திருந்தார். மதுரை அருகே உள்ள கிராமத்தில் வாழும் ஒரு சிறுவனுக்கும், அவனது தாத்தாவிற்கும் மற்றும் ஒரு ஆட்டுக்கும் உள்ள உறவுப்பிணைப்பை சொல்லும் படமாக உருவாகியுள்ளது. இன்னும் திரைக்கு வராத நிலையில் உலகம் முழுக்க பல திரைப்பட விழாக்களில் இப்படத்திற்கு பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது.
ஏற்கெனவே இந்தியன் பனோரமா மற்றும் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு வரவேற்பை பெற்ற இந்தப் படம் தற்போது ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஆகஸ்ட் 11ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடக்கும் 14வது மெர்போர்ன் திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த படத்தில் பூ ராமுவுடன் காளி வெங்கட், மாஸ்டர் தீபன், பாண்டியம்மா, லோகி, கமலி, ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். தீசனந் இசை அமைத்துள்ளார், எம்.ஜெயபிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். விரைவில் தியேட்டர்களில் வெளியாக உள்ளது.