வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் அதிக வசூலைப் பெறும் நடிகர் என்ற இடத்திலிருப்பவர் விஜய். அவருடைய அப்பா எஸ்ஏ சந்திரசேகர் கடந்த 45 வருடங்களுக்கும் மேலாக அதே ஈடுபாட்டுடன் பணிபுரிந்து கொண்டிருக்கிறார். அவர் இயக்கிய முதல் படமான 'அவள் ஒரு பச்சை குழந்தை' படம் 1978ம் ஆண்டு வெளிவந்தது. இந்த 2023 பிப்ரவரி மாதத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் வெளிவந்த 'நான் கடவுள் இல்லை' படம் அவர் கடைசியாக இயக்கிய படம்.
அவர் இயக்கிய படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடிப்பதை வழக்கமாக வைத்திருப்பார். கடந்த சில வருடங்களில் சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். அவர் இயக்கி கதாநாயகனாகவும் நடித்த படம் 'டிராபிக் ராமசாமி'. மேலும், தனுஷ் நடித்த 'கொடி', சிம்பு நடித்த 'மாநாடு' ஆகிய படங்களில் அரசியல்வாதியாக அவரது கதாபாத்திரம் பேசப்பட்டது.
இத்தனை வருடங்களுக்குப் பிறகு தற்போது டிவி சீரியல் பக்கம் போயிருக்கிறார். விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள 'கிழக்கு வாசல்' என்ற சீரியலில் அப்பா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதற்கான புரோமோ சில தினங்களுக்கு முன்பு வெளியானது. அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
தமிழ் சினிமாவில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் விஜய்யின் அப்பா, டிவி சீரியலில் அப்பா கதாபாத்திரத்தில் நடிப்பதை திரையுலகினர் மட்டுமல்ல, ரசிகர்களும் வியப்புடன் பார்க்கிறார்கள்.