அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
டாக்டர் பிரெட்ரிக்ஸ் என்பவர் தயாரித்து நடிக்கும் படம் 'மகசர்'. சுனில் கர்மா என்பவர் இயக்கியுள்ளார். 'விலங்கு' வெப்சீரிஸ் புகழ் கிச்சா ரவி, சம்பத் ராம், ஜப்பான் குமார், நந்திதா ஜெனிபர், பருத்திவீரன் வெங்கடேஷ், ஷாலு சரனேஷ் குமாரா, உஷா எலிசபெத் சுராஜ், ரவி வெங்கிடராம் ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன். புரூனோ என்கிற நாயும் நடிக்கிறது. இந்த படத்தின் கதையை நிகில் ஜினன் மற்றும் ஏ.ஆர்.ரத்தீஷ் இருவரும் இணைந்து எழுதி உள்ளனர் விஜய் பால் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஒளிப்பதிவை ரமேஷும் படத்தொகுப்பை ஷியான் ஸ்ரீகாந்த்தும் கவனிக்கின்றனர்.
படம் பற்றி இயக்குனர் சுனில் கர்மா கூறியதாவது: ஓய்வுபெற்ற சிபிஐ அதிகாரி ஒருவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தன் மனைவியுடன் அமைதியான வாழ்க்கைக்காக மலைப்பாங்கான பகுதியில் ஒரு பங்களாவில் வசிக்கிறார். ஓய்வு பெற்றாலும் கூட போலீசார் சில சிக்கலான வழக்குகளில் இவரது உதவியை நாடுகின்றனர். அதுமட்டுமல்ல சிவில் சர்வீஸ் மாணவர்களுக்கு தனது அனுபவத்திலிருந்து அவ்வப்போது பாடங்களும் எடுக்கிறார்.
சில சமயங்களில் தன்னை யாரோ கண்காணிப்பது போலவும் பின் தொடர்வது போலவும் ஒரு உணர்வு அந்த அதிகாரிக்கு ஏற்படுகிறது. ஒரு நாள் பனி சூழ்ந்த இரவு வேளையில் வழிப்போக்கன் ஒருவர் அவரிடம் உதவி கேட்டு வருகிறார். தான் இன்னும் நெடுந்தொலைவு பயணம் செல்ல வேண்டும் என்றும் அதுகுறித்து சம்பந்தப்பட்டவரிடம் தெரிவிக்க அந்த அதிகாரியின் தொலைபேசியை கொடுக்குமாறு கேட்கிறார்.
அவரது நடவடிக்கைகளால் அதிகாரிக்கு சந்தேகம் தோன்றினாலும் அவர் பேசிக்கொண்டு இருக்கட்டும் என உள்ளே சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தால் அந்த வழிப்போக்கனை அங்கே காணவில்லை. பல இடங்களில் தேடிவிட்டு தனது மனைவி படுத்திருக்கும் பக்கத்து அறையின் கதவை திறந்து பார்க்க, அந்த வழிப்போக்கன் அங்கே அவரது துப்பாக்கியை கையில் வைத்தபடி அமர்ந்திருக்கிறான்.
அவரைப் பார்த்து என்னை உங்களுக்கு நினைவில்லையா என்று கேட்டு அதிர்ச்சியும் அளிக்கிறான். யார் அவன்? எதற்காக வழிப்போக்கன் போல அதிகாரியின் வீட்டுக்குள் நுழைந்தான்? அவனுக்கும் அதிகாரிக்கும் இடையே என்ன முன்விரோதம் இருந்தது? அதிகாரி அவனை சமாளித்தாரா என்பது படத்தின் கதை. என்றார்.