தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

தமிழ்த் தொலைக்காட்சியில் நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றில் போட்டியாளராக நுழைந்து பின்னர் அதே டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக உயர்ந்து, பத்து வருடங்களுக்கு முன்பு 2012ல் வெளிவந்த 'மெரினா' படம் மூலம் கதாநாயகனாகவும் அறிமுகமானவர் சிவகார்த்திகேயன். தனது திறமையாலும் ரசிக்கத்தக்க விதத்தில் படங்களைத் தேர்வு செய்ததாலும் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறியவர் சிவகார்த்திகேயன்.
தற்போது அவர் கதாநாயகனாக நடித்து அடுத்த வாரம் வெளியாக உள்ள 'மாவீரன்' படம் தெலுங்கிலும் அதே நாளில் 'மகாவீருடு' என்ற பெயரில் வெளியாக உள்ளது. அப்படத்திற்கான வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்ச்சி நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது.
இயக்குனர் மடோன் அஷ்வின், சிவகார்த்திகேயன், அதிதி, சரிதா, தெலுங்கு இயக்குனர்களான சேகர் கம்முலா, அனுதீப், அட்வி சேஷ் உள்ளிட்டவர்கள் அந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் பேசிய அட்வி சேஷ், “பெரிய மனது கொண்ட பெரிய நட்சத்திரம். விரைவில் ஹிந்தியில் அறிமுகமாக உள்ளார்,” எனப் பேசிவிட்டு சிவகார்த்திகேயன் பக்கம் திரும்பி, “சாரி சார், இந்த செய்தியை பிரேக் செய்துவிட்டேன்,” என்றார்.
விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் எனத் தெரிகிறது.